அ. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. ராமசாமி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தச்சபட்டி என்னும் சிற்றூரில் பிறந்த ராமசாமி பட்டப்படிப்பு தொடங்கி முனைவர் பட்டம் வரை தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர். பள்ளிப்படிப்பு தொடங்கிப் படிப்புக்காகவும் பணிகளுக்காகவும் திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, வார்சா (போலந்து) போன்ற நகரங்களில் வாழ்ந்த அனுபவங்கள் அவருக்கு உண்டு. பணி ஓய்வுக்குப் பின் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்துவருகிறார்.

கல்வியும் பணிகளும்[தொகு]

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பின் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை(1987-1989), புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியிலும் (1989-1997) விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம், போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராக இரண்டாண்டுக் காலம் (2011-2013) பணி செய்யத் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. கல்வித்துறை சார்ந்து மொழிப்புல முதன்மையர், அம்பேத்கரியல் மைய இயக்குநர், நூலகம், நாட்டு நலப்பணித்திட்டம், பதிப்புத்துறை,இளைஞர் நலம் போன்ற அமைப்புகளின் ஆலோசகனை மற்றும் பணிப்பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனித்த அனுபவம் கொண்டவர். இந்தியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இடம் பெற்று தமிழ் இலக்கியக் கல்வியின் போக்குகளை உருவாக்குவதில் –குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இடத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவரத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டவர். இலங்கை, மலேசியப் பல்கலைக் கழகங்களில் கல்விசார் குழுக்களிலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.2019 ஜூன் 30 இல் பணி ஓய்வு.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி இயக்க நோக்கங்கள் கொண்ட வீதி நாடகங்களை அரங்கேற்றிய மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டவர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்ததோடு நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நாடகவியலின் நீட்சியாகத் திரைப்படங்களைக் குறித்து எழுதத் தொடங்கி, தமிழ் வெகுமக்கள் சினிமா உருவாக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் போக்குகளைக் கட்டுடைத்துக் கட்டுரைகளை எழுதும் விமரிசகராக அறியப்படுகிறார். 1990களுக்குப் பின் புதிய அலையாக எழுந்த தமிழ் தலித் எழுத்துக்களைப் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்த எழுத்துகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காகப் போலந்து, சௌதி அரேபியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியாக நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

தனி ஆசிரியராக[தொகு]

  • கி.ரா.நினைவுகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2022[1]
  • தமிழ் சினிமா - முன்வைப்புகள், கவன ஈர்ப்புகள், வெளிப்பாடுகள், உயிர்மை, சென்னை, 2021
  • நான்.. நீங்கள்.. அவர்கள்... (நேர்காணல்களின் தொகுப்பு) ,ஒப்பனை, திருமங்கலம், மதுரை, 2021
  • தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகமுறையும் வாழ்வும்(பிரஹலாதா பதிப்பு முன்னுரையுடன்),ஒப்பனை, திருமங்கலம், மதுரை, 2021
  • செவ்வியக்கவிதைகள், பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,2018
  • 10 நாடகங்கள், ஒப்பனை, சென்னை, 2016
  • கதைவெளி மனிதர்கள்,நற்றிணை, சென்னை, 2016
  • நாவல் என்னும் பெருங்களம்,நற்றிணை, சென்னை, 2016
  • மறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்),உயிர்மை, சென்னை, 2015
  • நாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
  • வார்சாவில் இருந்தேன், அயல்நாட்டுப் பயண அனுபவங்கள் பற்றிய கட்டுரைநூல், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
  • தொடரும் ஒத்திகைகள், நாடகம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
  • தமிழ்ச்சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்,உயிர்மை, சென்னை, 2014
  • இலக்கியமும் வரலாறும் ( நாயக்கர் காலம்) - உயிர்மை, சென்னை 2010
  • வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்த 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை, 2009
  • திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்த75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2009
  • மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித் இலக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை, 2008
  • முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை, 2007
  • தமிழ் சினிமா - அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு,நாகர்கோவில், 2007
  • நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம்,சென்னை, 2007
  • பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை, 2005
  • ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில், 2004[2]
  • அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர், 2002
  • வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை, 2002
  • ஒத்திகை,(இரண்டு நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல், கோவை, 1998
  • நாடகங்கள் விவாதங்கள், (மூன்றுநாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி,1995

தனிக்கையேடு[தொகு]

  • சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி, 2001

பதிப்பாசிரியராக

1.   தி.சு.ந.வின் திறனாய்வுத்தடம், பதி. ந.முருகேசபாண்டியன், அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், நியுசெஞ்சுரி புக்ஹவுஸ், 2020

2.  தி.சுந.வின் எண்பது அகவை நிறைவு மலர், பதி. ந.முருகேசபாண்டியன், அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், நியுசெஞ்சுரி புக்ஹவுஸ், 2020

3.   ஆய்வுத்தளங்களும் முறையியல்களும், முனைவர் அ.ராமசாமி, முனைவர் ஞா.ஸ்டீபன், தமிழியல் துறைக்கட்டுரைகளின் தொகுப்பு, பதிப்புத்துறை, பல்கலைக்கழக மானியக்குழுவின் பதிப்புத்துறை நிதி,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2018 [978-93-81402-32-0]

4.   உலகத்தமிழ் இலக்கிய வரைபடம், பன்னாட்டுக்கருத்தரங்க க்கட்டுரைகளின் தொகுப்பு, தொகுப்பாசிரியர்கள்: முனைவர் ஞா.ஸ்டீபன், முனைவர் அ.ராமசாமி, பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2018

5.  தமிழில் உரையும் உரைநடையும் இளங்கலைப்படிப்பின் முதல் பருவத்திற்குரியது, முதல் ஆசிரியர் அ.ராமசாமி, தமிழியல் துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  2018

6.   நள்ளிரவு வெக்கை , தொகுப்பாசிரியர்: அ. ராமசாமி, அம்பேத்கர் படிப்புமையம் நட த்திய ஆய்வுமாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2010

7.   வெகுஜனப்பண்பாடும் இலக்கியமும், தேசியக் கருத்தரங்க க்கட்டுரைகள், பதி. ஞா.ஸ்டீபன்& அ.ராமசாமி, தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2010

8.   பிரஹலாதா ( ஆய்வு முன்னுரையுடன் சங்கரதாஸ் சுவாமிகளின் புராண நாடகம்) காலச்சுவடு,நாகர்கோவில், 2009 [ 978-81-89359-80-5]

9.   தேற்றமும் தெளிவும் (துறையாசிரியர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள்) தமிழியல் துறை, பதி. முனைவர் அ.ராமசாமி& முனைவர் பே.நடராசன், பதிப்புத்துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2009, [ 978-81-908352-0-6]

10. பன்னிரண்டு சிறுகதைகள்,  இளங்கலைப் படிப்பில் இரண்டாம் பருவத்திற்குரியது, பல்கலைக்கழகத்திற்காக நியுசெஞ்சுரி பதிப்பகம் , 2006

11. திறனாய்வுத்தேடல்கள், பதி. ந.முருகேசபாண்டியன், அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார்,சித்திரை நிலவு, மதுரை, 2002

12. பின்னை நவீனத்துவம்:கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும், தொகுப்பாசிரியர்கள்: தி.சு.நடராசன், அ.ராமசாமி, கருத்தரங்க க்கட்டுரைகளின் தொகுப்பு, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், 1998

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ராமசாமி&oldid=3751975" இலிருந்து மீள்விக்கப்பட்டது