அ. முசிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. முசிபு, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறை சார்பில், நூலகத்துறையில் சிறப்பாக செயல்படும் நூலகர்களுக்கு வழங்கப்படும் , டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதன் நல் நூலகர் விருதை 2013 ஆம் ஆண்டு பெற்றவர். இவர், காயல்பட்டணம் கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர். மேலும் இவர் ஒரு மாற்றுத்திறனாளி. காயல்பட்டணம் கிளை நூலகத்தில் 100 புரவலர்களை சேர்த்தது இவரது சாதனை. இவரது முயற்சியால் கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் செலவில் நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கிராம மக்கள் பங்களிப்பான ரூ. 7 லட்சத்தை பலரிடம் நன்கொடையாக வசூல் செய்து கொடுத்துள்ளார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._முசிபு&oldid=1649416" இருந்து மீள்விக்கப்பட்டது