அ. பழனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. பழனியாண்டி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'சின்னரூணா' எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், தொடர் கதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நிலவுக்கு எட்டாத வானம்" (சிறுகதைகள்)
  • "சிந்தனைக் கனல்" (கவிதைகள்)
  • "சின்ன மலர்கள்" (சிறுவர் பாடல்கள்)
  • "தமிழைப் பிழையற எழுதுவோம்" (இலக்கண நூல்).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டி உட்படப் பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பழனியாண்டி&oldid=3230628" இலிருந்து மீள்விக்கப்பட்டது