அ. சேப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. சேப்பன் (17 ஆகசுடு 1937 -31 ஆகசுடு 2017 ) என்பவர் இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், இதழாளர் மற்றும்  தமிழ் நாட்டின்  இந்தியக் குடியரசுக் கடசியின் தலைவர் ஆவார். அண்ணல் அம்பேத்கர் திருசசபை என்ற ஓர் அமைப்பை உருவாக்கியவர்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

சேப்பன் நாகை மாவட்டம்  வேதாரண்யம் அருகில் ஆயக்காரன்புலம் என்ற ஊரில் பிறந்தார்.  ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சேப்பன் 1975 ஆம் ஆண்டில் தமது மருத்துவக் கல்வியை முடித்தார்.  1976 முதல் தனியாக மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். காங்கிரசில் சேர்ந்து லீக் முனுசாமி என்பவருடன் செயல்பட்டார். அம்பேத்கர் கொள்கைகளில்  ஈடுபாடு கொண்ட சேப்பன், இந்தியக் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். இந்தியக் குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் பின்னர் மாநிலத் தலைவர் ஆனார்.

இதழ்ப் பணிகள்[தொகு]

1981ஆம் ஆண்டில் உணர்வு என்ற  மாதம் இரு முறை இதழைத் தொடங்கி பல ஆண்டுகள் நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் துன்பங்கள், சிக்கல்கள் முதலியவை பற்றிய செய்திகள் அந்த இதழில் .இடம் பெற்றன. அம்பேத்கர் சிந்தனைகள் பற்றிய கட்டுரைகள், தலித்துகள் மீதான வன்முறைப் பதிவுகள், உள்ளூர் அளவிலான போராட்டங்கள், கட்சிக் கூட்டச் சொற்பொழிவுகளின் சாரம், தீர்மானங்கள், கவிதைகள் போன்றன  உணர்வு  இதழில் இடம்பெற்றன.

போராட்டங்கள்[தொகு]

1982 ஆம் ஆண்டு அரக்கோணம் அருகே உள்ள மின்னல் என்ற சிற்றுரில்,  சாதி மோதலில்  நாட்டாண்மை சுப்பிரமணி என்பவர் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நடைப் பயணமொன்றை சேப்பனும் சக்திதாசன் என்பவரும்  இணைந்து அரக்கோணம் தொடங்கி சென்னை கோட்டை வரை மேற்கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து கட்சிப் பணியாற்றினார். பட்டியல் இன மக்களின் விடுதலை இயக்கத்தை ஒருங்கிணைத்தார்.

இதர செயல்பாடுகள்[தொகு]

திருவள்ளுவர் உலகத் தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் செயல்பட்டார் 1981 இல் புத்த மதத்தைத் தழுவினார் 12 நூல்களை எழுதினார்.  அவற்றில் ‘விடுதலை பெறத் துடிப்பதேன்’, ‘பூரண விடுதலைப் பெற இஸ்லாம் மார்க்கமே’, ‘மண்டல கமிஷன் மீதான தீர்ப்பின் ஆபத்து’ ஆகியன அடங்கும்.  

உசாத்துணை[தொகு]

காலச்சுவடு, மாத இதழ் (அக்டோபர் 2017)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சேப்பன்&oldid=2710989" இருந்து மீள்விக்கப்பட்டது