அ. அறிவுநம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி (பிறப்பு: நவம்பர் 10 1952) தமிழக எழுத்தாளர், காரைக்குடி எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், புதுச்சேரி கலைவாணி நகர், இலாசுப்பேட்டையை வாழ்விடமாகவும் கொண்ட இவர் புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியற் புல முதன்மையராக 6 ஆண்டுகள் பணியாற்றிவருகின்றார். தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் பொறுப்பு இயக்குநர்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கூத்தும் சிலம்பும்
  • தமிழகத்தில் தெருக்கூத்து
  • நாட்டுப்புறக் களங்கள்
  • பாவேந்தரின் பன்முகங்கள்
  • கம்பரின் அறிவியல்
  • இலக்கியங்களும் உத்திகளும்
  • செம்மொழி இலக்கிய சிந்தனைகள்

உட்பட 23 நூல்களை எழுதியுள்ளார்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழ் முதுகலையில் பல்கலைக்கழக முதன்மை பெற்றமைக்காக தெ.பொ.மீ. தங்கப் பதக்கப் பரிசு
  • கம்பரின் அறிவியல் நூலுக்காக தமிழகம் மற்றும் புதுவை அரசுகளின் பரிசு
  • கம்பர் காட்டும் மள்ளர் மாண்பு என்ற நூலுக்காகப் புதுவை அரசின் தொல்காப்பிய விருது
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக தமிழ்மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அறிவுநம்பி&oldid=2613058" இருந்து மீள்விக்கப்பட்டது