உள்ளடக்கத்துக்குச் செல்

அவகாதரோ மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவகாதரோவின் எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
NA[1] இன் மதிப்பு பல்வேறு அலகுகளில்
6.02214129(27)×1023 மோல்−1
2.73159734(12)×1026 பவுண்டு-மோல்−1
1.707248434(77)×1025 அவுன்சு-மோல்−1

அவகாதரோ மாறிலி (Avogadro constant) அல்லது அவகாதரோ எண் (Avogadro's Number, அவோகாட்ரோ எண்) என்பது வேதியியல் கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மாறிலி ஆகும். இது ஒரு மிகப்பெரிய எண். ஒரு மோல் அளவு உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அல்லது அயனிகள் இவற்றின் மொத்த எண்ணிக்கையே அவகாதரோ எண் என்பதாகும். இதனைக் கண்டறிந்தவர் அமேடியோ அவகாதரோ.[2]

சுருங்கக் கூறினால், அவகாதரோ எண் என்பது துல்லியமாக 12 கி கார்பன்-12 என்னும் பொருளில் காணும் அணுக்களின் மொத்த எண்ணிக்கை ஆகும்.[3]

ஒரு மோல் அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே 6.02214X×1023 ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக ஒரு மோல் அளவாகிய 18 கிராம் நீர், 180 கிராம் குளுக்கோசு, 44 கிராம் கார்பன்-டை-ஆக்சைடு, 32 கிராம் ஆக்சிசன், இரண்டே இரண்டு கிராம் ஐதரசன் மூலக்கூறு, இப்படி அவ்வப் பொருள்களில் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் அவகாதரோ எண் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Avogadro constant. 2010 CODATA recommended values. NIST
  2. சி. சண்முகம், அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2010 இதழ்
  3. வேதியியல் தொகுதி-1, பதினொன்றாம் வகுப்பு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், திருத்திய பதிப்பு 2007 பக்கம் 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாதரோ_மாறிலி&oldid=3266756" இலிருந்து மீள்விக்கப்பட்டது