அளவிடக்கூடிய கற்றல் அடைவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளவிடக்கூடிய கற்றல் அடைவுகள்

அறிமுகம்

கற்றல் என்பது ஒரு வகை நடத்தை மாற்றம். அந்த மாற்றம் அறிவு, திறன், மனப்பான்மை, நடத்தை என்னும் நான்கு கூறுகளிலும் ஏற்படலாம்

அறிவு

அறிவு சிந்திக்க தூண்டும். அறிவு ஆராய வைக்கும். அறிவு சிக்கலுக்குத் தீர்வு தரும். அறிவு வாழ்வை எல்லாக் கோணங்களிலும் பகுப்பாய்வு செய்யும்.

திறன்

பள்ளிப் பருவம் என்பது திறன் அடைவுக்கான பருவம் ஆகும். திறன்களை மாணவர்கள் உற்றுநோக்கல் போலச் செய்தல், தன்னிச்சையாகச் செயல்படுதல் ஆகிய செயல்களால் அடைவர்.

மனப்பான்மை

மனப்பான்மை சூழ்நிலை, அனுபவம், கல்வி இவற்றால் ஏற்படுகிறது. பள்ளிப் பருவத்திலேயே உடன்பாட்டுச் சிந்தனை மற்றும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

பின்னூட்டம்

கல்வி நன்னடத்தை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இந்நான்கு கூறுகளிலும் ஒருவர் சிறந்து விளங்குவது கடினம் ஆகும்.

  1. மேற்கோள்

Gardner,j.{2006} assessment and learning.london sage publications std

www.tnscert.org.in