அல்பிரட் எல். குறோபெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்பிரட் எல். குறோபெர்
Ishi.jpg
1911ல் அல்பிரட் எல். குறோபெரும் இஷியும்.
பிறப்புஜூன் 11, 1876
ஹோபோக்கென், நியூ ஜெர்சி
இறப்புஅக்டோபர் 5, 1960(1960-10-05) (அகவை 84)
கல்விகொலம்பியா பல்கலைக் கழகம்
பணிமானிடவியலாளர்
வாழ்க்கைத்
துணை
(2) தியோடோரா கிராக்கோ
பிள்ளைகள்கார்ல், உர்சுலா, டெட் (Ted), கிளிப்டன்.

அல்பிரட் லூயிஸ் குறோபெர் (ஜூன் 11, 1876–அக்டோபர் 5, 1960), 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் அமெரிக்க மானிடவியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஒருவராக இருந்தார். இவர் நியூ ஜேர்சியில் உள்ள ஹோபோக்கென் ஏனும் இடத்தில் பிறந்தார். கொலம்பியாக் கல்லூரியில் படித்துப் பதினாறாவது வயதில் பட்டம் பெற்றார். 1897 ஆம் ஆண்டில் புனைவிய நாடகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில், பிராண்ஸ் போவாஸ் என்பாரின் வழிகாட்டலின் கீழ் 1901 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். அரப்பாஹோ இனக்குழுவினர் மத்தியில் இவர் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் அழகூட்டல் குறியீடுகள் என்னும் தலைப்பில் இவரது ஆய்வுக் கட்டுரை அமைந்தது. இப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட மானிடவியலுக்கான முதலாவது முனைவர் பட்டம் இதுவாகும்.