அல்டாஃப் புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது அல்டாப் புகாரி
Syed Altaf Bukhari
தொகுதிஅமீரா கடல், சிறீநகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
வேலைஅரசியல்வாதி

சையது அல்டாப் புகாரி (Syed Altaf Bukhari) என்பவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் அமீரா கடல் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார் [1]. இவர் சம்மு காசுமீர் மக்கள் சனநாயக கட்சியின் உறுப்பினர் ஆவார். சம்மு காசுமீரின் முன்னாள் நிதி அமைச்சர் பணிநீக்கம் செய்யப்பட்டபோது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த இவர் இடைக்கால நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட்தாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், இவர் அக்கட்சியை விட்டு விலகினார். தற்போது இவர் சம்மு காசுமீர் மக்களின் சனநாயகக் கட்சியில் உறுப்பினராக இல்லை. அவரது நெருங்கிய உறவினரும் மற்றொரு மக்கள் சனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முகமது திலாவர் மிர் முன்னாள் அமைச்சர்கள் அக்கீம் யாசின் மற்றும் குலாம் அசன் மிர் ஆகியோருடன் சையது அல்டாப் புகாரி தலைமையில் இப்பகுதியில் மற்றொரு அரசியல் கட்சியைத் தொடங்க பல சந்திப்புகளை நடத்தி முயற்சித்தார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ADR. "Syed Mohammad Altaf Bukhari(JKPDP):Constituency- Amirakadal(Srinagar) - Affidavit Information of Candidate:".
  2. https://www.hindustantimes.com/india-news/former-j-k-minister-altaf-bukhari-expelled-from-pdp-for-anti-party-activity/story-BcW7wSFzYm0xRcA2FF3cjN.html Hindustan Times. Former J-K minister Altaf Bukhari expelled from PDP for ‘anti-party activity’ Retrieved 21 January 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டாஃப்_புகாரி&oldid=3926502" இலிருந்து மீள்விக்கப்பட்டது