உள்ளடக்கத்துக்குச் செல்

அல்செஸ்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"அல்செஸ்டிஸின் மரணம்"

அல்செஸ்டிஸ் கிரேக்கத் தொன்மவியலில் சொல்லப்பட்டுள்ள ஒரு பெண். இவள் தனது கணவன் மீது கொண்ட அன்பு காரணமாய் அறியப்படுகிறாள். குறிப்பிட்ட சூழ்நிலையில் இவளது கணவனுக்காக வேறு யாரேனும் உயிரைக் கொடுத்தால் ஒழிய அவன் வாழ இயலாது என்ற நிலை ஏற்பட்டது. அவனது வயதான பெற்றோர் கூட அவனுக்காக உயிர்விட முன்வரவில்லை. இந்நிலையில் அல்செஸ்டிஸ் தன் கணவனுக்காக உயிர் விட முன்வந்தாள். இவள் உயிர் பிரிய இவளது கணவன் உயிர்த்தெழுந்து கொண்டிருந்தான். இந்நிலையில் ஹீராக்கிள்ஸ் எமனுடன் போராடி இவளைக் காத்தான்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்செஸ்டிஸ்&oldid=3768229" இலிருந்து மீள்விக்கப்பட்டது