அல்சாக்காரோவைட்டு-துத்தநாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்சாக்காரோவைட்டு-துத்தநாகம்
Alsakharovite-Zn
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNaSrKZn(Ti,Nb)4(Si4O12)2(O,OH)4·7H2O
இனங்காணல்
நிறம்வெண்மை, இளம் பழுப்பு,நிறமற்றது
பிளப்புஏதுமில்லை
முறிவுசமச்சீரற்று/சமமற்று
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.9

அல்சாக்காரோவைட்டு-துத்தநாகம் (Alsakharovite-Zn) என்பது NaSrKZn(Ti,Nb)4(Si4O12)2(O,OH)4•7H2O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது மிகவும் அரிய கார இசுட்ரோன்சியம் துத்தநாகம் தைட்டானியம் சிலிக்கேட்டு என்ற வளையசிலிக்கேட்டு வகைக் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற காரத் தீப்பாறைகளிலிருந்து பெறப்படும் இக்கனிமம் லேபுன்டோசோவைட்டு குழுவைச் சேர்ந்த கனிமமாகக் கருதப்படுகிறது [1][2]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்சாக்காரோவைட்டு-துத்தநாகம் கனிமத்தை Ask-Zn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது

ஒற்றைசரிவச்சுப் படிகக்கட்டமைப்பில் Cm என்ற இடக்குழுவுடன் அல்சாக்காரோவைட்டு-துத்தநாகம் படிகமாகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pekov I. V., Chukanov N. V., Zadov A. E., Rozenberg K. A. and Rastsveateva R. K. 2003: Alsakharovite-Zn, NaSrKZn(Ti,Nb)4(Si4O12)2(O,OH)4.7H2O, a new mineral of the labuntsovite group from Lovozero Massif, Kola Peninsula. Zapiski Vserossiyskogo mineralogicheskogo obshchestva, 132(1), pp. 52-58 (in Russian); [1]
  2. http://www.mindat.org/min-26417.html Mindat
  3. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  4. Rozenberg, K.A.; Rastsvetaeva, R.K.; Pekov, I.V.; Chukanov, N.V. (2002). "New Zn-rich representative of the labuntsovite group: crystal structure and microtwinning". Doklady Chemistry 383 (4/6): 110–113. doi:10.1023/A:1015456306621.