அல்கோடோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கோடோனைட்டு
Algodonite
அல்கோடோனைட்டு - அவூட்டன் மாவட்டம், மிச்சிகன், அமெரிக்கா
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCu6As
இனங்காணல்
மோலார் நிறை456.2 g
நிறம்சாம்பல் நிறம், வெண் வெள்ளி, சாம்பல் வெள்ளி, வெண்கலநிறமாக மங்குகிறது
படிக இயல்புபேரளவில் மணிமணியாக பொதுவாகக் கருங்கல் மற்றும் தீப்பாறையாகக் காணப்படுகிறது.
முறிவுசார்-சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலோகம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுக விடாது
ஒப்படர்த்தி8.38 (அளவீடு), 8.72 (கணக்கீடு)
பிற சிறப்பியல்புகள்காந்தத் தன்மையற்றது, ஒளிரும் தன்மையற்றது
மேற்கோள்கள்[1][2][3]
உடோமிகைட் மற்றும் அல்கோடோனைட்டு சேர்ந்த கலவையான மோகாவ்கைட் நக்கெட் மற்றும் செப்பு

அல்கோடோனைட்டு (Algodonite) என்பது Cu6As என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தாமிர ஆர்சனைடு கனிமம் ஆகும். சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும் இக்கனிமம் அறுகோணப் படிகங்களாக படிகமாகிறது. மோவின் அளவு கோலில் அல்கோடோனைட்டின் கடினத்தன்மை மதிப்பு 4 எனவும் நீர் ஒப்படர்த்தி அளவு 8.38 - 8.72. ஆகவும் உள்ளது.

சிலி நாட்டில் உள்ள கோகியூம்போ நகரிலுள்ள அல்கோடோன்சு வெள்ளி சுரங்கத்தில் 1857 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Algodonite. Webmineral
  2. Algodonite. Mindat.org
  3. Williams, Sidney A. (1963). "Crystals of rammelsbergite and algodonite". American Mineralogist 48: 421–422. http://www.minsocam.org/MSA/collectors_corner/arc/rammelsbergite.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கோடோனைட்டு&oldid=2226291" இலிருந்து மீள்விக்கப்பட்டது