அல்காமா சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்காமா சுரங்கம்
Algama mine
அமைவிடம்
கபரேவ்சுக் பிரதேசம்
நாடுஉருசியா
உற்பத்தி
உற்பத்திகள்சிர்க்கோனியம்

அல்காமா சுரங்கம் (Algama mine) உருசியாவின் தூரக்கிழக்கிலுள்ள கபரேவ்சுக் பிரதேசத்தின் அயானோ-மேசுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சிர்க்கோனியச் சுரங்கம் ஆகும். உருசியாவில் அமைந்துள்ள சிர்க்கோனிய சுரங்கங்களில் இதுவும் ஒரு பெரிய சுரங்கமாகும். இச்சுரங்கத்தில் 93.7 மில்லியன் டன்கள் சிர்க்கோனியத் தாது இருப்பில் உள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்தாதுவில் கலந்துள்ள சிர்க்கோனியத்தின் தரம் 4.62% ஆகும்[1][2]. வடக்கு ஆசிய கிரேட்டான் எனப்படும் மிகத் தொன்மையான சிடானோவாய் தொகுதியின் தென்கிழக்கு விளிம்பில் இச்சுரங்கம் அமைந்துள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Geology and Nonfuel Mineral Deposits of Greenland, Europe, Russia, and Northern Central Asia" (PDF) (in ஆங்கிலம்). US Geological Survey. பார்க்கப்பட்ட நாள் December 30, 2018.
  2. "Mineral deposits of Northern Asia" (PDF). Russian Academy of Sciences. 2004. பார்க்கப்பட்ட நாள் December 30, 2018.
  3. "Metallogenesis and Tectonics of the Russian Far East, Alaska, and the Canadian Cordillera" (PDF) (in ஆங்கிலம்). US Geological Survey. பார்க்கப்பட்ட நாள் December 30, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்காமா_சுரங்கம்&oldid=2675095" இலிருந்து மீள்விக்கப்பட்டது