அலெக்சாந்தர் மெர்வர்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலக்சாந்தர் மிக்கைலோவிச் மெர்வர்ட்டு (உருசியம்: Александр Михайлович Мерварт) (1884 - 1932), உருசிய நாட்டு இந்தியவியலாளர், மொழியியாளர், மற்றும் திராவிடவியலாளர் ஆவார். உருசியாவின் முதல் திராவிட மொழியிலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1913 ஆம் ஆண்டில் மனிதவியல் மற்றும் இனவியல் துறையின் இந்தியக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1914-1918 ஆண்டுகளில், இவரும் இவர் துணையும் தென்னிந்தியா. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர், தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா தொடர்பான கலை மற்றும் பண்பாட்டு பொருட்களை சேகரித்தனர். லெனின்கிரேடு நகருக்கு திரும்பியபின் லெனின்கிரேடு மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் உருசிய நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1926-1929 ஆண்டுகளுக்கிடையான காலக்கட்டத்தில் இருபது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.