அலெக்சாண்டர் கோசிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் கோசிபா
Aleksander Kosiba
அலெக்சாண்டர் கோசிபா - போலந்து புவியியல் வல்லுநர்.
பிறப்பு(1901-01-18)18 சனவரி 1901
போலந்து
இறப்பு18 செப்டம்பர் 1981(1981-09-18) (அகவை 80)
தேசியம்போலந்து
பணிபுவியியல் மற்றும் பனியாற்றியல் வல்லுநர்

அலெக்சாண்டர் கோசிபா (Aleksander Kosiba) போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியல் வல்லுநர் ஆவார். அந்நாட்டின் கோர்லைசு மாகாணத்திலுள்ள இலிபசா கிராமத்தில் 1901 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். புவி இயற்பியலாளர், பனியாற்றியியல் அறிஞர், காலநிலை வல்லுநர் என பன்முகங்களுடன் கோசிபா இயங்கினார்.

இலிவிவ் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படும் இயான் காசிமியர்சு பல்கலைக்கழகத்தில் கோசிபா இளங்கலை மூன்றாம் நிலை படிப்புகளை முடித்தார்.

நார்வே நாட்டின் புவியியல் சங்கத்தில் கோசிபா ஒரு கெளரவ உறுப்பினராக இருந்தார். 1934 ஆம் ஆண்டில் டென்மார்க்கு நாட்டின் கிரீன்லாந்து பயணக்குழுவில் கோசிபா ஈடுபட்டார்.[1] அங்கு இவர் மே முதல் செப்டம்பர் வரை என ஐந்து மாதங்கள் பணிபுரிந்தார்.[2] 1978 ஆம் ஆண்டில் கோசிபா தனது கடைசி அறிவியல் படைப்பான பனி, பனிப்பாறைகள் - பனிப்படலங்கள் என்ற நூலை வெளியிட்டார்.

போலந்து நாட்டின் விராத்சாஃப் நகரத்தில் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று கோசிபா காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Instytut Zachodni (1977). Polish Western affairs. Instytut Zachodni. பக். 307. https://books.google.com/books?id=cjFpAAAAMAAJ. பார்த்த நாள்: 19 March 2012. 
  2. Arctic Regions: Greenland: Completed Expeditions Polar Record
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_கோசிபா&oldid=3388866" இலிருந்து மீள்விக்கப்பட்டது