அலெக்சாண்டர் கிப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு சசெக்சு மாகாணத்தின் கௌபோல்டு கிராமத்திலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிப்சின் வண்ணக் கண்ணாடிகள்

அலெக்சாண்டர் கிப்சு & நிறுவனம் (Alexander Gibbs & Co) 1858 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிரித்தானிய வண்ணக் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமாகும்.

அலெக்சாண்டர் கிப்சு தனது தந்தை ஐசக் அலெக்சாண்டர் கிப்சால் நிறுவப்பட்ட குடும்ப நிறுவனத்திலிருந்து பிரிந்து இந்நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் 1915 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. முதலில் 38 பெட்போர்டு சதுக்கம் என்ற முகவரியில் அமைந்திருந்த நிறுவனம் பின்னர் 1876 இல் புளூம்சுபரி தெருவுக்கு மாற்றப்பட்டது. [1]

இங்கிலாந்தின் தேவோன் மாகாணத்திலுள்ள பைடுபோர்டு நகரத்தின் புனித மரியாள் தேவாலயத்தின் கிழக்கு சன்னல் 1865 ஆம் ஆண்டில் கிப்சு நிறுவனம் தயாரித்த வண்ணக் கண்ணாடியாகும். 1877 ஆம் ஆண்டு மார்கரெட்டு தெருவில் அமைந்துள்ள ஆல்செயிண்டுசு தேவாலயத்தின் கண்ணாடிகள் கிப்சின் விரிவான நிலைத்திருக்கும் கண்ணாடி வேலைப்பாடுகளாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alexander Gibbs & Co. (1858-1915)". University of Wales. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  2. All Saints Margaret Street website: Stained Glass Windows
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_கிப்சு&oldid=3077320" இலிருந்து மீள்விக்கப்பட்டது