அலுமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலுமைடு (Alumide) என்பது முப்பரிமாண அச்சுத்தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். அலுமினியம் மற்றும் பாலியமைடு என்ற சொற்களிலிருந்து அலுமினைடு என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. நைலான் பலபடியில் அலுமினியம் தூள் கலந்து அலுமினைடு தயாரிக்கப்படுகிறது. சிட்டங்கட்டல் எனப்படும் திரவமாக்காமல் வெப்பமூட்டும் முறையில் தூளை அடுக்கடுக்காக [1] சிட்டங்கட்டும் செயலால், மாதிரிகளில் அச்சிடுதல் நிகழ்கிறது. முப்பரிமாண அச்சிடுதலில் பயன்படுத்தப்படும் பிற பொருள்களைக்காட்டிலும் அலுமினைடு விறைப்பாக உள்ளது. பாலி அசிட்டிக் அமிலம் போன்ற வெந்நெகிழி கலவைகள் உருகலாக மாறும் அதிக வெப்பநிலையில் கூட அசிட்டமைடு வடிவத்தைப் பராமரித்து ஈடுகொடுக்கிறது [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alumide". Shapeways. பார்த்த நாள் 4 September 2013.
  2. "Materials and Material Management". Electro Optical Systems. பார்த்த நாள் 4 September 2013.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமைடு&oldid=2169234" இருந்து மீள்விக்கப்பட்டது