அலிபாபா
அலிபாபா அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும் (علي بابا والأربعون لصا)' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது. திறந்திடு சீசே என்னும் பிரபலமான் தொடர், இந்த கதையில் வரும் திருடர்களின் குகையை திறக்கும் ரகசிய குகையாகும்.

வரலாறு
[தொகு]ஆண்டனி காலண்ட் என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். அங்கு செவிவழி கதை சொல்பவரான தற்போதைய சிரியாவின் அலெப்போ நகரத்திலிருந்து வந்த ஹன்னா தியாப் என்பவரிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.[1]
இந்தக் கதையின் முதன்முதலில் அறியப்பட்ட உரை கேலாண்டின் பிரஞ்சு மொழிபெயர்ப்பு ஆகும். ரிச்சர்ட் எப். பர்டன் இதை தனது மொழிபெயர்ப்பில் துணை தொகுப்புகளில் சேர்த்தார், ஆனால் முக்கிய கதைகள் தொகுப்பில் அவர் சேர்க்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு தி புக் ஆஃப் தி தௌசண்ட் நைட்ஸ் அண்ட் நைட் என்ற பெயரில் வெளியானது.[2]
அமெரிக்க அறிஞர் டங்கன் பிளாக் மெக்டொனால்ட் இந்தக் கதையின் அரபு மொழி சிறப்புப் பிரதி ஒன்றை போட்லியன் நூலகத்தில் இருந்ததாகக் கண்டுபிடித்தார்.[3] ஆனால் பின்னர் இது நகலி உரையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.[4]
கதையில் அலிபாபாவின் பயணம்
[தொகு]அலிபாபா ஓர் ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஓர் அண்ணன் இருந்தான், அவன் பெயர் காஸிம். ஒரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்து கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.
இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
இதை அறிந்த கொள்ளையரகளின் தலைவன், அலிபாபவை கொன்றுவிட முற்பட்டான். அலிபாபா பணிப்பெண், மார்கியானாவின் உதவியால் அந்த கொள்ளையர்களின் சதியை முறியடித்தான். பின்னர், தன் மகனை மார்கியானாவுக்கு திருமணமும் செய்து வைத்தான்.
தழுவல்கள்
[தொகு]திரைப்படம்
[தொகு]- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்) - கே. எஸ். மணி இயக்கத்தில், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நடித்தது.
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்) - எம். ஜி. ஆர் நடித்தது
குழுமம்
[தொகு]அலிபாபா குழுமம், அலிபாபாவின் பெயர் பிரபலத்திற்காக இணைய வர்த்தக சீன நிறுவனம் அக்குழுமத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goodman, John (17 Dec 2017). Marvellous Thieves adds a new chapter to Arabian Nights – Paulo Lemos Horta gives 'secret authors' their due in his study of the World Literature classic. North Shore News.
- ↑ Burton, R. F. Supplemental Nights to the Book of the Thousand Nights and a Night with Notes Anthropological and Explanatory. Vol. III, fasc. 2. p. 369. (n.)
- ↑ Duncan Black MacDonald (April 1910). "'Ali Baba and the forty thieves' in Arabic from a Bodleian MS". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland: 327–386. doi:10.1017/S0035869X00039575. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015020450691;view=1up;seq=387.
- ↑ Mahdi, Muhsin (1994). "Galland's Successors". The Thousand and One Nights: From the Earliest Known Sources; Part 3, "Introduction and Indexes".
- ↑ "Alibaba's IPO Filing: Everything You Need to Know - Digits - WSJ". blogs.wsj.com. 7 May 2014. Retrieved 11 July 2014.