அலமாரி
அலமாரி (Cupboard) என்பது பொதுவாக கைப்பொருள்கள் வைக்கக் கூடிய ஒரு இடம். இது தட்டுகள், குடுவைகள் வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அலமாரி என்பது ஒரு வகையான மூடிய மரச்சாமான் எனவும் கொள்ளலாம்.[1][2] அலமாரி என்பது ஆங்கிலச் சொல். அமெரிக்கர்கள் இதனைத் "தனிச்சிற்றறை" (Closet) என்று கூறுவர்.
அலமாரியின் வகைகள்[தொகு]
- காற்றோட்ட அலமாரி என்பது, நீர் கொதிகலன் கொண்டதாகும். இதில் கொதிகலனைச் சுற்றியும் மேற்புறமும் துணிகள் வைப்பதற்கான அடுக்குகள் வெப்பம் சுற்றிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது துணிகளில் ஈரப்பதம் படியாமல் காக்கும். இதனைக் கொதிகலன் அலமாரி என்றும் அழைப்பர்.
- உள்கட்டு அலமாரி என்பது ஒரு அறையின் ஒரு உள்ளங்கமாக இருக்கும். இதனைத் தனியாக நகர்த்த முடியாது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Cupboard". The Free Dictionary By Farlex. 19 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Andrews, John (2006) British Antique Furniture. Antique Collectors' Club ISBN 1-85149-444-8; p. 226