அலகாபாதி சுர்க்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலகாபாதி சுர்க்கா (இந்தி: इलाहाबादी सुरखा) எனப்படுவது இளஞ்சிவப்பு நிறத்திலான உட்பகுதியையும், சிவப்பு நிறத்திலான வெளித்தோலையும் கொண்ட கொய்யாப்பழ வகையாகும்.[1][2] இந்த வகை பழங்கள் மிக இனிப்பாக இருக்கும். இந்த கொய்யாப்பழச் செடிகள் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரத்தில் பயிரிடப்படுகின்றன.[3] கிட்டத்தட்ட ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இவை பயிரிடப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[4] இந்த வகை பழங்களுக்காக உத்தரப் பிரதேசத்திற்கு புவிசார் குறியீட்டு எண் கிடைத்துள்ளது.[5]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாதி_சுர்க்கா&oldid=2187981" இருந்து மீள்விக்கப்பட்டது