அறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டம்
![]() | |
முழுத் தலைப்பு | அறிவுசார் சொத்துத் திருட்டையும் பொருளியல் புத்தாக்கங்களுக்கான உண்மையான வலைவழி அச்சுறுத்தல்களையும் தடுக்கும் சட்டம் 2011 |
---|---|
எழுத்துச்சுருக்கம் | PIPA |
பொதுவழக்கில் | மேலவை (செனட்) சட்டவரைவு 968 |
மேற்கோள்கள் | |
குறியீடு | |
சட்டமன்ற வரலாறு | |
| |
முக்கிய திருத்தங்கள் | |
உச்சநீதிமன்ற வழக்குகள் | |
அறிவுசார் சொத்துரிமை காப்புச் சட்டம் 2011 (ஆங்கிலம்: சுருக்கமாக IP PROTECT Act, முழுமையாக:அறிவுசார் சொத்துத் திருட்டையும் பொருளியல் புத்தாக்கங்களுக்கான உண்மையான வலைவழி அச்சுறுத்தல்களையும் தடுக்கும் சட்டம் 2011, The Preventing Real Online Threats to Economic Creativity and Theft of Intellectual Property Act of 2011), அல்லது PIPA, செனட் சட்டவரைவு S. 968, என்பது மே 12, 2011இல் ஐக்கிய அமெரிக்க மேலவையில் 11 இணை முன்மொழிவோரின் ஆதரவுடன் சனநாயக கட்சி செனட்டர் பாட்ரிக் லியாஹி தாக்கல் செய்துள்ள சட்டவரைவு ஆகும்.
இந்தச் சட்டத்தின் நோக்கமாகக் கூறப்படுவது திருட்டு மற்றும் போலிகளை ஊக்குவிக்கும் வலைத்தளங்களுக்கான, குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து இயங்கும் வலைத்தளங்களுக்கான, அணுக்கத்தை தடுக்கும் வழிவகைகளை அமெரிக்க அரசிற்கும் பதிப்புரிமை உள்ளோருக்கும் உருவாக்குதாகும்[1]. சட்டமன்ற நிதிநிலை அலுவலகம் இந்தச் சட்டத்தை செயல்படுத்த 2016 வரை USD 47 மில்லியன் செலவாகும் என்றும் 22 சிறப்பு முகவர்கள் மற்றும் 26 ஊழியர்களை பணியிலமர்த்தி பயிற்சி அளிக்க வேண்டுமென்றும் மதிப்பிட்டுள்ளது.[2].
இந்தச் சட்டம் 2010ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்ற இயலாத வலைவழி மீறல் மற்றும் நகல்களைப் போராடும் சட்டத்தின் (Combating Online Infringement and Counterfeits Ac, COICA) புதிய வடிவாகும். இதனை ஒத்த மற்றொரு சட்டவரைவு, வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம் கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சிநெட் கட்டுரை, 12 மே 2011
- ↑ The Hill.com, 19 ஆகத்து 2011
- ↑ BBC news, 13 மே 2011
வெளியிணைப்புகள்[தொகு]
- (ஆங்கில மொழியில்) சட்டவரைவு வரிவடிவம்