அர்தேசிர் ரத்தன்ஜி வாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்தேசிர் ரத்தன்ஜி வாடியா (Ardeshir Ruttonji Wadia) (1888-1971) ஓர் இந்திய எழுத்தாளராவார். இலக்கியத்தில் பங்களித்ததற்காக 1961 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. [1] [2] 1888 இல் மும்பையில் பிறந்த இவர் சட்டம் பயின்றார். 1930 முதல் 1931 வரையிலும், 1942 முதல் 1943 வரையிலும் மைசூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் 1954 முதல் 1966 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். இவர் 1971இல் இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.amazon.com/s/ref=ntt_athr_dp_sr_1?_encoding=UTF8&field-author=Ardeshir%20Ruttonji%20Wadia&ie=UTF8&search-alias=books&sort=relevancerank
  2. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 2013-05-10.
  3. Previous Members Rajya Sabha website.