அர்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்தீப் சிங்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு20 திசம்பர் 1990 (1990-12-20) (அகவை 29)[1]
சிந்து மாவட்டம், ஆரியானா, இந்தியா[2]
உயரம்180 cm (5 ft 11 in)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகிரேக்க-உரோம வகை மற்போர்
நிகழ்வு(கள்)98 கிகி
21 மார்ச் 2016 இற்றைப்படுத்தியது.

அர்தீப் சிங் (Hardeep Singh) (பிறப்பு: 20 திசம்பர் 1990) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆண் கிரேக்க-உரோம வகை மற்போராளி. . இவர் 2013 இல் பொதுநலவாயத்து போட்டியாளர் ஆனார். மேலும் 2016 ஆசிய மற்போர் போட்டிகளில் பின்தங்கினார் (runner-up). இவர் தான் இந்தியாவின் முதல் உயரெடை கிரேக்க- உரோம வகை மற்போராளியாக 2016 ஒலிம்பிக்கில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டார்.[5]

இளமைப் பருவம்[தொகு]

அர்தீப் ஆரியானா மாநிலம், சிந்து மாவட்ட்த்தில் உள்ள தகோல்லா எனும் ஊரில் ஓர் உழவர் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவர் பள்ளிப் பருவத்திலேயே மற்போர் பயிலத் தொடங்கிவிட்டார். இவரது திறமையை இனங்கண்ட இவரது பயிற்சியாளர் இவரை ஒரு விளையாட்டுப் பள்ளியில் சேர்த்துள்ளார். இப்பள்ளியில் இவர் மற்போரின் அடிப்படைகளைக் கற்றார். பிறகு இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் வட்டார மையத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அங்கு இவர் நன்கு தேறியதால், இவர் தில்லியில் உள்ள சகத்ராசல் விளையாட்டரங்கத்துக்கு மேலும் வளமான பயிற்சி பெற அனுப்பப் பட்டுள்ளார். இவர் அங்கு நான்காண்டுகல் பயிற்சி பெற்றுள்ளார். அப்போது இவர் இந்தியத் தொடர்வண்டித் துறையில் வேலையில் சேர்ந்துள்ளார்.[2] இவர் முதலில் கட்டற்ர மற்போர்ப் பயின்றாலும் பின்னர் 2009 இளையோர் தேசிய மற்போர் போட்டிகளுக்குப் பிறகு கிரேக்க-உரோம வகை மற்போரில் ஈடுபடலானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hardeep (IND)". Institut für Angewandte Trainingswissenschaft (IAT). மூல முகவரியிலிருந்து 30 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 March 2016.
  2. 2.0 2.1 2.2 Prakash, Karam (20 March 2016). "Hardeep books Oly quota in greco-roman". The Tribune (Chandigarh). PTI. Archived from the original on 21 March 2016. https://web.archive.org/web/20160321122402/http://www.tribuneindia.com/news/sport/hardeep-books-oly-quota-in-greco-roman/211777.html. பார்த்த நாள்: 21 March 2016. 
  3. "2013 - COMMONWEALTH WRESTLING CHAMPIONSHIPS". Commonwealth Amateur Wrestling Association (CAWA). மூல முகவரியிலிருந்து 21 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 March 2016.
  4. "2013 - COMMONWEALTH WRESTLING CHAMPIONSHIPS". Commonwealth Amateur Wrestling Association (CAWA). மூல முகவரியிலிருந்து 21 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 March 2016.
  5. "Wrestler Hardeep books 2016 Rio Olympics quota in Greco-Roman". Zee News. 20 March 2016. Archived from the original on 21 March 2016. https://web.archive.org/web/20160321132419/http://zeenews.india.com/sports/sports/wrestling/wrestler-hardeep-books-2016-rio-olympics-quota-in-greco-roman_1867784.html. பார்த்த நாள்: 21 March 2016. 
  6. AS, Shan (23 March 2016). "Free to Dream Post Game-changing Call". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 24 March 2016. https://web.archive.org/web/20160324134045/http://www.newindianexpress.com/sport/Free-to-Dream-Post-Game-changing-Call/2016/03/23/article3341346.ece. பார்த்த நாள்: 24 March 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

Profile

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்தீப்_சிங்&oldid=2937976" இருந்து மீள்விக்கப்பட்டது