அர்ஜன் ஹசித்
அர்ஜன் ஹசித் | |
---|---|
பிறப்பு | அர்ஜன் ஜெத்தானந்த் தன்வானி 7 சனவரி 1930 Karachi, British India |
புனைபெயர் | அர்ஜன் ஹசித் |
தொழில் | கவிஞர் |
மொழி | சிந்தி |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1985) சாகித்திய அகாதமி ஆய்வுதவித் தொகை (2013) |
அர்ஜன் தன்வானி (பிறப்பு 7 ஜனவரி 1930) இந்திய சிந்தி மொழி கவிஞர் ஆவார். இவர் அர்ஜன் ஹசித் என்ற புனைப் பெயரால் பிரபலமாக அறியப்படுகின்றார். இவர் ஏழு கவிதைகள் மற்றும் கசல்களைத் தொகுத்துள்ளார். 1984 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது மெரோ சிஜி என்ற கசல் தொகுப்பிற்காக 1985 ஆம் ஆண்டில் சிந்தியில் சாகித்திய அகாதமி விருதை வென்றார். மேலும் 2013 ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்ய அகாதமியின் ஆய்வு உதவித் தொகை வழங்கப்பட்டது. இது சாகித்திய அகாதமியின் மிக உயர்ந்த கௌரவமாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அர்ஜன் ஜெதானந்த் தன்வானி 1930 ஆம் ஆண்டு சனவரி 7 அன்று கராச்சியில் சிந்தி குடும்பத்தில் பிறந்தார்.[1] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற இவர் காண்டியாரோ உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சங்க செயலாளராக இருந்தார். 1947 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதினார். பின்னர் அவரது மனைவி பர்பாரியை மணந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவர்களது குடும்பம் இந்தியாவின் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தது. அகமதாபாத்தில் அர்ஜன் அஞ்சல் மற்றும் தந்தித் துறையில் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோண்டலில் அஞ்சலகத் தலைவராக சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.[2] அகில இந்திய வானொலி கலைஞராக பணியாற்றிய இவர் பத்தாண்டுகளாக மத்திய சாகித்திய அகாதமியின் சிந்தி ஆலோசனைக் குழுவில் இருந்தார்.[3] 1996 ஆம் ஆண்டில் அர்ஜன் ஹசித்: ஒரு ஆய்வு என்ற புத்தகம் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இவர் 2002 ஆம் ஆண்டில் குஜராத் சாகித்திய அகாதமியின் தலைவராக பணி புரிந்தார். 2004 ஆம் ஆண்டில், புதுதில்லியில் நடந்த 1 வது இந்திய-பாக்கித்தான் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அர்ஜன் பாக்கித்தானின் சிந்துவுக்கு இந்திய-பாக் மாநாட்டின் உறுப்பினராக விஜயம் செய்தார். கராச்சியில் நடைப்பெற்ற "ஷா-சச்சால்-சாமி சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட இவர் 18 ஆம் நூற்றாண்டின் சிந்தி கவிஞர் சாமி பற்றிய ஒரு அறிவார்ந்த கட்டுரையை வழங்கினார்.[4]
இலக்கியப் படைப்புகள்
[தொகு]தன்வானி 1956 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கினார். பின்னர் "ஹசித்" என்ற புனைப் பெயரைப் பெற்றார். [சான்று தேவை] அவர் அகமதாபாத்தின் சிந்தி சாஹித் சங்கத்தின் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்தார். [சான்று தேவை] இவரது கவிதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. 1958 ஆம் ஆண்டில் மும்பையில் நடைப்பெற்ற அகில இந்திய சிந்தி சாகித்திய சம்மேளனத்திலும், அகில இந்திய முஷைராவிலும் பங்கேற்றார்.
1966 ஆம்அ ஆண்டில் இவரது முதல் புத்தகமான சுவாசன் ஜீ சுர்ஹான் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் கவிதைகள் மற்றும் கசல்களின் தொகுப்பு ஆகும். அவரது அடுத்த படைப்பான பதார் பதர் காந்தா காந்தா 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[4][2] இப்புத்தகமும் கசல்களின் தொகுப்பாகும். 1983 ஆம் ஆண்டில் ஷா அப்துல் லத்தீப் பிட்டாயின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட உமர் மருயீ என்ற இசை நாடகத்தை எழுதினார்.[4]1984 ஆம் ஆண்டில் மெரோ சிஜி என்ற கசல்களின் தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பிற்காக 1985 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[5] கவிஞர் ஹரி தர்யானியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகத்தைத் திருத்தியுள்ளார். 1994 ஆம் ஆண்டில் மோகோ மற்றும் 1999 ஆம் ஆண்டில் அன்ஜ்னா எனும் கசல்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. ரமேஷ் சந்திர ஷா எழுதிய ஜெய்சங்கர் பிரசாத் (1995) என்ற இந்தி புத்தகத்தையும் அர்ஜன் ஹசித் மொழிபெயர்த்தார்.[6] 2006 ஆம் ஆண்டில் ஹசித்தின் சாஹி பாட்ஜே என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஆசாடியா கான்போய் சிந்தி கசல் (சுதந்திரத்திற்குப் பிந்தைய சிந்தி கசல்களின் தொகுப்பு),[7] 2009 ஆம் ஆண்டில் நா லென் நா என்ற தொகுப்பு என்பன வெளிவந்தன. இவர் 2012 ஆம் ஆண்டில் ஹாலியோ ஆ புட் என்ற சிந்தி திரைப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றினார். இவரது பல கசல்கள் பல்வேறு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன.
விருதுகள்
[தொகு]ஹசித் தனது இலக்கியப் பணிகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டில் மெரோ சிஜிக்காக சாகித்திய அகாதமி விருதை வென்றார். 1998 ஆம் ஆண்டில் குஜராத் சிந்தி அகாதமி புராஸ்கர், 2006 ஆம் ஆண்டில் சிந்தி மொழியை மேம்படுத்துவதற்கான தேசிய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2011 ஆம் ஆண்டில் தாகூர் இலக்கிய விருது [8]மற்றும் 2012 இல் அகில் பாரத் சிந்தி போலி சபாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2013 ஆம் ஆண்டில், சாகித்திய அகாதமியின் மிக உயர்ந்த கௌரவமான சாகித்திய அகாதமி ஆய்வு உதவித் தொகை என்பன இவருக்கு வழங்கப்பட்டன.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "Arjan Hasid: Biography: Famous Sindhi: Sindhi Gazal: Academy Award: Sindhi Poetry | The Sindhu World". thesindhuworld.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ 2.0 2.1 2.2 "Sahitya Akademi Fellowship: Arjan Hasid" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Promoters & Preservers of Sindhyat: Arjan Hasid" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 4.0 4.1 4.2 "Meet the Author: Arjan Hasid" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "..:: SAHITYA : Akademi Awards ::." web.archive.org. 2016-03-04. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Five Decades: The National Academy of Letters, India : a Short History of Sahitya Akademi".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Sindhi publications" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "In another tongue". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.