அருண் சுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் சுப்ரமணியன்
Arun Subramanian
தனிப்பட்ட விவரங்கள்
கல்விகேசு வெசுட்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கொலம்பியா சட்டப்பள்ளி, (முனைவர்)

அருண் சுப்ரமணியன் (Arun Subramanian) நியூயார்க்கைச் சேர்ந்த ஓர் அமெரிக்க வழக்கறிஞர் ஆவார். நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் அமெரிக்க மாவட்ட நீதிபதியாகப் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கல்வி[தொகு]

ஓகியோ மாநிலத்தின் பிரதான நகரமான கிளீவ்லாந்திலுள்ள கேசு வெசுட்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும் 2004 ஆம் ஆண்டு கொலம்பியா சட்டப்பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]

தொழில்[தொகு]

2004 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அருண் சுப்ரமணியன் இரண்டாவது சுற்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியான தென்னிசு இயாக்கப்சிடம் சட்ட எழுத்தராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை, நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான இயெரார்டு ஈ. லிஞ்சிடமும், 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உரூத் பேடர் கின்சுபர்க்கின் சட்ட எழுத்தராகவும் இருந்தார். 2007 ஆம் ஆண்டு முதல், இவர் நியூயார்க்கில் உள்ள சுசுமான் காட்ஃப்ரே வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை வணிகத்தில் பங்குதாரராக இருந்து வருகிறார்.[1]

அமெரிக்க மாவட்ட நீதிபதியாகப் பரிந்துரை[தொகு]

சுப்ரமணியனை அமெரிக்க மாவட்ட நீதிபதியாக ஆட்சிப் பேரவை உறுப்பினர் சக் சூமர் சனாதிபதி யோ. பைடனுக்கு பரிந்துரைத்தார்.[2] செப்டம்பர் 2, 2022 ஆம் ஆண்டு சேப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பணியாற்ற சுப்ரமணியனை பரிந்துரைக்கும் தனது நோக்கத்தை சனாதிபதி பைடனும் அறிவித்தார். மார்ச் 31, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி அன்று இரண்டாவது சுற்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்ட நீதிபதி அலிசன் நாதனால் காலியான இருக்கைக்கு சனாதிபதி பைடன் சுப்ரமணியனை பரிந்துரைப்பார். இப்பரிந்துரை உறுதிப்படுத்தப்பட்டால், நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான ஐக்கிய மாகாணங்களின் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதியாக அருண் சுப்ரமணியன் சிறப்பு பெறுவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 The White House(September 2, 2022). "President Biden Names Twenty-Sixth Round of Judicial Nominees". செய்திக் குறிப்பு. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Balk, Tim (June 9, 2022). "Sen. Schumer recommends 3 candidates for spots on federal bench in New York's Eastern, Southern Districts". New York Daily News. பார்க்கப்பட்ட நாள் September 2, 2022.
  3. "Biden nominates Arun Subramanian as first South Asian judge for Southern District of New York". New York Daily News. பார்க்கப்பட்ட நாள் September 2, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_சுப்ரமணியன்&oldid=3874105" இலிருந்து மீள்விக்கப்பட்டது