அரோமாட்டிக் ஐதரோகார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பென்சீன் வளையம்

அரோமாட்டிக் ஐதரோகார்பன் (aromatic hydrocarbon) அல்லது அரீன் (arene) என்பது ஒரு ஹைடிரோகார்பன் (கரிம நீரதை)ப் பொருள். இதன் மூலக்கூறு, கரிம அணுக்களால், சமதளத்தில் அறுகோண வளையமாக அல்லது வளையங்களாக அமைந்து ஓரிடப்படா எதிர்மின்னிகளால் இணைப்புண்ட வேதிப்பொருள். இப்பொருட்கள் ஒருவகையான இனியமணம் கொண்டிருப்பதால் இவைகளுக்கு அரோமாட்டிக் (அரோமா (aroma) = மணம்) ஹைடிரோகார்பன் என்று பெயர். ஆனால் இப்பொருளில் கரைந்துள்ள சில கலப்புப்பொருட்களால் இம்மணம் ஏற்படுகின்றது. இவ்வகை வேதிப்பொருள்களில் உள்ள ஆறு கரிம அணுக்கள், மூடிய ஒரு வளையமாய் அமைந்து, மாறிமாறி ஒற்றைப் பிணைப்பாயும் இரட்டைப் பிணைப்பாயும் இருப்பதை பென்சீன் வளையம் எனக்குறிப்பது வழக்கம். அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் ஒற்றை வளையமாகவோ, பல வளையங்கள் கொண்டதாகவோ இருக்ககூடும்.

நாப்தலீன் (Napthalene). இது ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன். கரிம அணுக்களுக்கிடையே வேதிப்பிணைப்பு ஒற்றைப் பிணைப்பாகவும் இரட்டைப் பிணைப்பாகவும் மாறிமாறி வருவதைப் பார்க்கலாம்

அரோமாட்டிக் சேர்மங்கள் பொதுவாக ஆறிலிருந்து பத்து வரையான கரிம அணுக்களைக் கொண்டிருக்கும். இவற்றுள் முதன்மையானவை:

ஆகியவை ஆகும்.