அரியணை
Jump to navigation
Jump to search
அரியணை என்பது அரசன் அவைக்களத்தில் அமரும் இருக்கை. அரி என்னும் சொல் சிங்கத்தைக் குறிக்கும். அணை என்பது அமரும் இருக்கை. அமரும் இருக்கையைச் சிங்கம் தாங்குவது போலச் செய்யப்பட்டிருக்கும் இருக்கை. இக்காலத்தில் நாற்காலியில் சிங்க முகம் கொண்ட கைப்பிடி இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும் இருக்கையையும் அரியணை என்கிறோம்.[1]
- அரிமான் ஏந்திய முறை முதல் கட்டிலில் சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்தான்.[2]
- திருமாவளவன் அரிமா சுமந்த அமளி மேலான் எனக் குறிப்பிடப்படிகிறான்.[3]
- இராமன் முடி சூட்டிக்கொண்டபோது அரியணையை அனுமன் தாங்கிக்கொண்டிருந்தான் எனக் கம்பராமாயணம் குறிப்பிடுகிறது.
- அரசி
- அரசன் அரியணையில் வீற்றிருக்கும்போது அரசியும் அவன் அருகில் வேறொரு இருக்கையில் அமர்ந்திருப்பது வழக்கம்.[4]
- காண்க
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ சிம்மாசனம் (சிம்ம ஆசனம்)
- ↑ சிலப்பதிகாரம் 26 கால்கோள் காதை 1
- ↑ பொருநராற்றுப்படை இறுதி வெண்பா 2
- ↑ கோவலனைக் கொலை செய்தது பிழை என உணர்ந்ததும் பாண்டியன் செடுஞ்செழியன் அரியணையிலிருந்து விழுந்து உயிர் துறந்தபோது, நிகழ்ந்த தவற்றுக்குத் தானும் ஒரு காரணம் என எண்ணிய அரசி கோப்பெருந்தேவியும் கணவன் காலடியைத் தொழுதவண்ணம் விழுந்து உயிர் துறந்த செய்தி இதனைத் தெரிவிக்கிறது.