உள்ளடக்கத்துக்குச் செல்

அரயோப்பாகு மேடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  அரயோப்பாகு        அக்ரோபோலிஸிலிருந்து பார்க்கும் போது.
திருத்தூதர் பவுல்  அரயோப்பாகுவில் பிரசங்கம் செய்தார் என்பதை குறிக்கும்  தகடு

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். அதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க பெயர் ஆரேயோஸ் பகோஸ், "ஏரிஸ் பாறை" (பண்டைய கிரேக்க: Ἄρειος Πάγος) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் ,  இது வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல்  மற்றும் சமய விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டது.[1][2]

ஏதென்சின் பிரப்புக்களையும், முன்னாள் ஆர்கோன் தலைவர்களைக் கொண்ட பூலி அவையானது இந்த அரயோப்பாகு குன்றின் மீது கூடி நகர அரசின் நிர்வாக விவகாரங்களை நடத்திவந்தனர். ஏதென்சின் மன்னர்களான ஆர்கோனை இந்த அவையே நியமித்தது அதிகாரமும் இந்த அவையிடமே இருந்தது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. MacDowell, Douglas M. (1978). The law in classical Athens. Ithaca, N.Y.: Cornell University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801493652. இணையக் கணினி நூலக மைய எண் 20663324.
  2. Pseudo-Aristotle. "Atheneion Politeia". Perseus. Perseus Tufts. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
  3. வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 129–130.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரயோப்பாகு_மேடை&oldid=3419458" இலிருந்து மீள்விக்கப்பட்டது