அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மத்தூர்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ISO தரச் சான்றிதழ் பெற்ற சிறந்த பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் மத்தூரில் அமைந்துள்ளது. 1991 இல் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக பிரிந்து 1994 இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் போதிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 32 பேர் பணியாற்றுகின்றனர். 2021-2022 கல்வி ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 857 மாணவிகள் பயின்றனர்.
சுமார் 2.67 ஹெக்டர் பரப்புள்ள இப்பள்ளி வகுப்பறை, மைதானம் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளது.