அரஃபூரா கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 9°30′S 135°0′E / 9.500°S 135.000°E / -9.500; 135.000

அரபூரா கடலின் வரைபடம்

அரபூரா கடல் (Arafura Sea) பசிபிக் பெருங்கடலின் மேற்கே ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினிக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக கிழக்கே டொரெஸ் நீரிணை மற்றும் பவளக் கடலும், தெற்கே கார்ப்பெண்டாரியா குடாவும், மேற்கே திமோர் கடலும், வடமேற்கே பண்டா கடல், சேரம் கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. இது 1290 கிலோமீட்டர்கள் நீளமும், 560 கிலோமீட்டர்கள் அகலமும் கொண்டது. இதன் ஆழம் பொதுவாக 50-80 மீட்டர்கள் ஆகும். மேற்கே இதன் ஆழம் மேலும் அதிகரிக்கிறது. ஆழங்குரைந்த வெப்பவலயக் கடல் ஆனதால் இங்கு வெப்பவலய சூறாவளிகள் இடம்பெறுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரஃபூரா_கடல்&oldid=3283036" இருந்து மீள்விக்கப்பட்டது