அம்ம வாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ம வாழி - எனத் தொடங்கும் சங்கப்பாடல்கள் பல உள்ளன.

பொருள் நுட்பம்[தொகு]

வாழி[தொகு]

Have a good day என்று இக்காலத்தில் பொதுப்பட வாழ்த்துவது போல அக்காலத்தில் 'வாழி', 'வாழியோ' என்று கூறிச் சங்ககால மக்கள் பிறரை வாழ்த்தினர். அதில் ஒரு வேறுபாடு. Hello! good morning என்பது போலத் தமிழர் தொடக்கத்திலும் வாழ்த்தியிருக்கிறார்கள்.

அம்ம[தொகு]

'அம்ம கேட்பிக்கும்'[1], அம்ம என்னும் பொது விளி 'அம்மா' என நீண்டும் வரும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது போன்று சங்கப்பாடல்களில் எல்லா, எலுவ என்னும் பொது விளிச்சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொடங்கும் பாடல்கள்[தொகு]

  • அம்ம வாழி கேளிர் [2] - பலர்பால் விளி
  • அம்ம வாழி கொண்க [3] - ஆண்பால் விளி
  • அம்ம வாழி தோழி - [4] [5] - பெண்பால் விளி
  • அம்ம வாழி பாண - [6] - ஆண்பால் விளி
  • அம்ம வாழியோ மகிழ்ந - [7] - ஆண்பால் விளி
  • அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி - [8] - ஒன்றன்பால் விளி

மேற்கோள்[தொகு]

  1. தொல்காப்பியம் , இடையியல் -28
  2. (வெண்கண்ணனார் - அகநானூறு 130)
  3. (அம்மூவனார் - ஐங்குறுநூறு 139)
  4. 10 பாடல்கள் (கபிலர் - ஐங்குறுநூறு - குறிஞ்சி - இரண்டாவது நூறு 211-230)
  5. இந்தப் பத்துடன் இப்படித் தொடங்கும் பாடல்கள் மொத்தம் 62 உள்ளன.
  6. (அம்முவனார் - ஐங்குறுநூறு 132) (ஓரம்போகியார் - ஐங்குறுநூறு 89)
  7. (ஓரம் போகியார் - ஐங்குறுநூறு 77)
  8. (தும்பிசேர் கீரனார் - குறுந்தொகை 392)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ம_வாழி&oldid=3513233" இலிருந்து மீள்விக்கப்பட்டது