உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பர் அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1931இல் கையால் வரையப்பட்ட ஓவியத்தில் அசல் அம்பர் அறையின் தோற்றம்.
1917ஆம் ஆண்டு கேதரின் அரண்மனையில் இருந்த  அம்பர் அறை
புனரமைக்கப்பட்ட ஆம்பர் அறை, 2003

அம்பர் அறைAmber Room (உருசியம்: Янтарная комната, ஒ.பெ Yantarnaya Komnata, இடாய்ச்சு மொழி: Bernsteinzimmer, போலிய: Bursztynowa komnata) என்பது உருசியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கேதரின் அரண்மனைக் குழுவைச் சேர்ந்த செர்ஸ்காய் சோலோ அரண்மனையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட  ஒரு அறையாகும். இந்த அறையில் அம்பர் பலகைகளில் தங்க இலைகள்,  கண்ணாடிகள் போன்றவற்றால் அலங்கரிக்கபட்ட  ஒரு அறை.  18ஆம் நூற்றாண்டில் பிரஸ்சியாவில்  அசல் அம்பர் அறை கட்டப்பட்டது. அது அங்கிருந்து உருசியாவிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது அங்கிருந்து அகற்றப்பட்டு இறுதியில் காணாமல் போனது. அது காணாமல் போனதற்கு முன்னர், இது "உலகின் எட்டாவது அதிசயம்" என்று கருதப்பட்டது.  1979 ஆண்டுக்கும் 2003 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கேத்தரின் அரண்மனையில் செய்யப்பட்ட புனரமைப்பினால் இது மீண்டும் நிறுவப்பட்டது.

அம்பர் அறையானது கி.பி.1701இல்  பிரஷ்ய நாட்டின் பெர்லினில் உள்ள சார்லோட்டன்பெர்க் அரண்மனையில் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் இறுதியில் பெர்லின் நகர அரண்மனையில் நிறுவப்பட்டது. இது ஜெர்மானிய சிற்பி அண்ட்ரீஸ் ஸ்கல்டர், டென்மார்க்கைச் சேர்ந்த அம்பர் சிற்பி காட்ஃப்ரைட் உல்ஃப்ரம் ஆகியோர் கூட்டணியில் உருவாக்கப்பட்டது.  ஸ்லூட்டர் மற்றும் வொல்ஃப்ராம் ஆகியோர் இந்த அறை வடிவமைப்பு பணியை 1707 வரை மேற்கொண்டனர். 1716இல் உருசியாவின் முதலாம் பேதுரு, பிரஷ்யாவுக்கு வந்தபோது அம்பர் அறையின் பேரழகைக் கண்டு வியந்துபோனார்.  அப்போது பிரஷ்யாவின் அரசராக இருந்த பிரடெரிக் வில்லியம் உருசிய அரசர் பீட்டருக்கு அம்பர் அறையைப் பரிசாகக் கொடுத்தார். அதனால் அம்பர் அறையின் சிற்பங்களும் பாகங்களும் கழற்றப்பட்டு, உருசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் உருசியாவில் அரசக் குடும்பத்தின் கோடைகால வசிப்பிடமான கேத்தரின் அரண்மனையில் அம்பர் அறை மறுபடியும் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் உருசிய மற்றும் ஜெர்மானிய சிற்பிகள் இணைந்து அம்பர் அறையை  55 சதுர மீட்டர் (590 சதுர அடி) க்கும் மேலானதாக,  6 டன் (13,000 பவுண்டு) அம்பர் கொண்டு விரிவுபடுத்தினர்.

இரண்டாம் உலகப்போரின் போது, இட்லரின் நாசி ஜெர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் புகுந்தன. அப்போது நாசிப்படைகள் அம்பர் அறையிலுள்ள பொக்கிஷங்களைக்  கழற்றி எடுத்து, ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தன. அங்கு  கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் கொஞ்ச காலத்துக்கு அந்த அம்பர் பொக்கிஷங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அவை எங்கு உள்ளன என்பது மர்மமாக உள்ளது. 1979இல் சோவியத் அரசு, அம்பர் அறையை செர்ஸ்காய் சோலோவில் மீண்டும் உருவாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தது. நாற்பது பேர் அடங்கிய உருசிய, ஜெர்மானிய சிற்பக் கலைஞர்கள் இந்த வேலையில் சுமார் 24 ஆண்டுகள் ஈடுபட்டனர். பின்னர்  2003ஆம் ஆண்டில் கேதரின் அரண்மனையில் அம்பர் அறை திறக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

உருவாக்கம்

[தொகு]
புனரமைக்கப்பட்ட அம்பர் அறையின் ஒரு மூலைப் பகுதி

கி.பி.1701இல்  பிரஷ்யாவின் பேரரசர் முதலாம் பிரடெரிக்கால்.  அவரது இரண்டாவது மனைவியான அரசி சோபி சார்லோட் ஆசைப்பட்டபடி,  சார்லோட்டன்பெர்க் அரண்மனையில் அழகு மிகுந்த அம்பர் அறை ஒன்று உருவாக்கப் பட்டது.[1][2] கலைநயம் மிகுந்த சிற்பங்களும் அலங்காரங்களும் வடிவங்களும் அறை முழுக்கச் சுவர்களில் பொருத்தப்படும் விதமாக அம்பர் பிசினில் செதுக்கப்பட்டன.[1][2] ஜெர்மானிய சிற்பி அண்ட்ரீஸ் ஸ்கல்டர் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த அம்பர் சிற்பி காட்ஃப்ரைட் உல்ஃப்ரம் ஆகியோர் கூட்டணியில் இவை உருவாக்கப்பட்டன.[1][2][3]

இந்த அம்பர் அறைப் பொருட்களானது  சார்லோட்டன்பெர்க் அரண்மனையை அலங்கரிக்க முதலில் உருவாக்கப்பட்டது என்றாலும்  அதற்குப் பதிலாக, பெர்லின் நகர அரண்மனையில் பொருத்தப்பட்டன.[4] ஆம்பர் அறையானது பெர்லின் நகர அரண்மனையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1716இல் உருசிப் பேரரிசின் மன்னர்  உருசியாவின் முதலாம் பேதுரு, பிரஷ்யாவுக்கு வந்தார். அங்கு இருந்த அம்பர் அறையின் பேரழகில் அசந்து அதைப் பாராட்டினார். அப்போது பிரஷ்யாவின் அரசராக இருந்தவர் பிரடெரிக் வில்லியம். சுவீடன் நாட்டுக்கு எதிராக உருசியாவும் பிரஷ்யாவும் கைகோத்திருந்தன. அந்த இணைப்பின் அடையாளமாக பிரடெரிக் வில்லியம், பீட்டருக்கு அம்பர் அறையைப் பரிசாகக் கொடுத்தார்.[2][3][5]

இதையடுத்து அம்பர் அறையின் சிற்பங்களும் பாகங்களும் கழற்றப்பட்டு, உருசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு.  அங்கே பெர்லினில் இருந்தவாறு மீண்டும் மறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டன.[1][2] இந்த அம்பர் அறையை அரசர் பீட்டரின் மகள் பேரரசி எலிசவேத்தா பெட்ரோவ்னா அரசக் குடும்பத்தின் கோடைகால வசிப்பிடமான கேத்தரின் அரண்மனையில் நிறுவ முடிவெடுத்தார்.[3][6]  18ஆம் நூற்றாண்டில் உருசிய மற்றும் ஜெர்மானிய சிற்பிகள் இணைந்து அம்பர் அறையை  55 சதுர மீட்டர் (590 சதுர அடி) க்கும் மேலானதாக, 6 டன் (13,000 பவுண்டு) அம்பர் கொண்டு விரிவுபடுத்தினர்.[2][5]   இந்த பணியானது பத்து ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றது.[1][2]

இரண்டாம் உலகப் போரின் போது கொண்டு செல்லப்படல்

[தொகு]
ஆம்பர் அறைச் சுவரில் இடம்பெற்ற ஒரு தேவதூதன் சிலை

இரண்டாம் உலகப்போரின்போது  நாசி ஜெர்மனி படைகள் சோவியத் உருசியா மீது  படையெடுத்து  முன்னேறி வந்தன. இதனால் அப்போது சென் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்த அம்பர் அறையிலுள்ள பொக்கிஷங்களை படையெடுப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, அம்பர் வேலைப்பாடுகளைப் பத்திரமாகக் கழற்றி எடுக்க அதன் பொறுப்பாளர்கள் முயன்றனர்.[1] ஆனால், அதற்கான அவகாசம் இருக்கவில்லை. அம்பர் சிற்பங்கள் அதிகம் காய்ந்து போயிருந்ததால் அவசரமாக அகற்றும்போது உடைந்து போகும் நிலையில் இருந்தன.[1] எனவே, பொறுப்பாளர்கள் மிகப் பெரிய வண்ணக் காகிதங்களை ஒட்டி, அம்பர் அறையை வேறொரு அறையாக மாற்றிக் காட்ட நினைத்தனர். ஆனால்  நாஜிப்படையினர் எளிதில் அம்பர் அறையை அடையாளம் கண்டுகொண்டனர்.[3]

இதையடுத்து அம்பர் சிற்பங்கள், அலங்காரங்கள் அனைத்தும்  இரண்டு வள்ளுநர்களின் மேற்பார்வையில்  36 மணி நேரத்தில் ஜெர்மன் வீரர்களால் கவனமாக அகற்றப்பட்டன.[2][3][6][7] இதன்பிறகு 1941 அக்டோபர் 14, இல் ஜெர்மனியின் கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் இந்த அம்பர் பொக்கிசங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.[2][3][7] 1941 நவம்பர் 13 அன்று கோனிக்ஸ்பெர்க் செய்தித்தாள் கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் அம்பர் அறை  கண்காட்சி குறித்து அறிவிப்பு வெளியானது.[7]

கோனிக்ஸ்பெர்க்கில் கடைசி நாட்கள்

[தொகு]

1945 சனவரி 21 மற்றும் 24 ஆகிய காலகட்டத்தில் அம்பர் அறை பொக்கிசங்கள் எல்லாம் இட்லரின் கட்டளைப்படி வேறொரு ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன.[8] [9]

1944 ஆகத்தில் கோனிக்ஸ்பெர்க் கோட்டை மீது ராயல் ஏர் ஃபோர்சால் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.   1945 ஏப்ரலில் நடந்த இறுதிப் போருக்கு  முன்னர், செஞ்சேனையின்  பீரங்கிகளால் இது மிகுதியான சேதத்துக்கு ஆளானது.[10]

புனரமைப்பு

[தொகு]
Immense sums were spent on both the original and reconstructed Amber Room.

1979இல் சோவியத் அரசு, அம்பர் அறையை புஸ்கின் கோட்டையில் மீண்டும் உருவாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தது. நாற்பது பேர் அடங்கிய உருசிய, ஜெர்மானிய சிற்பக் கலைஞர்கள் இந்த வேலையில் சுமார் 24 ஆண்டுகள் ஈடுபட்டனர்.[2][3] இதை உருவாக்க பழைய ஓவியங்கள் மற்றும் பழைய கருப்பு வெள்ளை ஒளிபப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி அசல் அம்பர் அறையைக் கண்முன் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட அசல் அம்பர் பலகைகள் மற்றும் அலங்காரப் பொருட்களில் 350 நிறங்கள் கொண்ட அம்பர்கள் கொண்டுள்ளன.[11][12]  திறமையான தொழிலாளர்கள் இல்லாத‍து ஒரு சிக்கலாக இதை உருவாக்குவதில் இருந்த‍து. இதனால் புதிய அம்பர் அறையில் மிக நுட்பமான வேலைப்பாடுகளில் சிறு குறைகள் உண்டு.[12]

இந்த அறை புனரமைப்பு திட்டமானது தொடக்கத்தில் இருந்தே நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வந்த‍து. ஜேர்மன் நிறுவனமான ஈ.ஆன் இடமிருந்து $ 3.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டது.[13]   2003 ஆம் ஆண்டளவில், உருசிய கைவினைஞர்களால் இதன் பெரும்பாலான வேரை முடிக்கப்பட்டது.[12] இந்த புதிய அம்பர் அறையானது உருசியன் ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் மற்றும் செருமனியின் சான்சுலர்  கெர்ஃகாத் சுரோடர் ஆகியோரால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் 300 வது ஆண்டு நிறைவையொட்டி திறக்கப்பட்டது. அர்ப்பணிக்கப்பட்டது.[14]

பெர்லினுக்கு அருகில் கிளீன்மச்சோவில் அசல் அம்பர் அறையின் ஒரு சிற்றுருவிலான ஒரு அம்பர் அறை உள்ளது.[15] இது பெர்லின் சிற்றுரு சேகரிப்பாளரான உல்லா கிளிங்க்பில்  அசல் கிழக்கு பாரசீக அம்பரால் செய்யப்பட்ட இந்த  சிற்றுரு நகலைக் கொண்டிருந்தார்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பர்_அறை&oldid=2764600" இலிருந்து மீள்விக்கப்பட்டது