அமெரிக்க மனநல மருத்துவர்கள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமெரிக்க மனநல மருத்துவர்கள் கல்லூரி (American College of Psychiatrists) என்பது அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோ நகரத்தை தளமாகக் கொண்ட மனநல மருத்துவர்களின் சங்கமாகும். இச்சங்கம் 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] ஒவ்வோர் ஆண்டும் இச்சங்கம் கூட்டங்களை நடத்துகிறது. செய்திமடலை வெளியிடுகிறது, விருதுகளை வழங்குகிறது. மனநல பயிற்சி பெறுபவர்களுக்கான பிரைட் (Psychiatry Resident-In-Training Examination) என்ற தேர்வையும் மனநல மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதற்கான (Psychiatrists In-Practice Examination) பைப் என்ற தேர்வையும் ஏற்பாடு செய்கிறது. அமெரிக்காவில் உள்ள 46,000 க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்களில் 750 மனநல மருத்துவர்கள் வரை இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் நடப்பிலுள்ள உறுப்பினர்களால் இறுதி செய்யப்படுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The American College of Psychiatrists: Home". acpsych.org. பார்த்த நாள் 19 March 2014.
    - "American College of Psychiatrists". psychiatry.utoronto.ca. மூல முகவரியிலிருந்து 3 February 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 March 2014.
    - "AMERICAN COLLEGE OF PSYCHIATRISTS". healthtalk.umn.edu. மூல முகவரியிலிருந்து 1 பிப்ரவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 March 2014.
    - "American College of Psychiatrists". organizedwisdom.com. பார்த்த நாள் 19 March 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]