அமுந்திரத்து தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுந்திரத்தம்மா

அமுந்திரத்து தேவி கோயில் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்ர காளி கோயிலாகும். இந்த இந்துக் கோவில் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள முடக்கல் என்ற இடத்தில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.   பத்ரகாளி இங்கு அர்த்த பத்மசான முத்திரையில் உள்ளார்.[1]

கட்டிடக்கலை[தொகு]

மூலவர் சன்னதி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படுகின்ற பாண்டியர் கோயில் கட்டுமானப் பாணியைக் கொண்டுள்ளது. கோயில் திருச்சுற்றினைக் கொண்டுள்ளது. அந்தத் திருச்சுற்றானது ஒரு நமஸ்கார மண்டபத்தைக் கொண்டுள்ளது அது கருவறைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. முக மண்டபம், கொடிமரம் உள்ளிட்ட பிற கூறுகள் இங்கு உள்ளன. வெளித்திருச்சுற்றில் கணபதி, நாகர், பிரம்ம ராக்ஷசு, யோகேஸ்வரன், நவகிரகம் மற்றும் மதன் தம்புரான் போன்றோருக்கான சன்னதிகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் கோயில் குளம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]