அமுக்க வலு
Jump to navigation
Jump to search
ஒரு பொருண்மத்தின் அமுக்க வலு (Compressive strength) என்பது, அதன் மீது தாக்கி அதன் கனவளவைக் குறைக்க முயலும் விசையொன்றை எதிர்க்கும் வலுவைக் குறிக்கும். தாக்கும் விசை அதிகரிக்கும்போது ஒரு நிலையில் பொருண்மம் உடையும் நிலையை அடையும். இது அமுக்க வலுவின் எல்லை எனப்படும். சில பொருண்மங்கள் உடைவதில்லை, ஆனால், மீளமுடியாதபடி உருமாற்றம் அடைகின்றன. இவ்வாறான பொருண்மங்கள் தொடர்பில் அமுக்க வலுவின் எல்லை, அப்பொருண்மம் குறித்த அளவு உருமாற்றம் அடையும் நிலை ஆகும்.