அமிர்தம்
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் (ⓘ) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.
தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினை பெற்றனர்.