அமித் மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமித் மகதோ (Amit Mahto) ஒரு இந்திய அரசியல்வாதியும் சில்லியிலிருந்து ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினராக இருந்ததோடு ஜார்க்கண்ட் அரசியல் கட்சியில் இளைஞர்களின் முகமாகக் கருதப்பட்டார். சில்லியைச் சேர்ந்த முன்னாள் ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் அமித் மகதோ கட்சியில் இருந்து விலகினார்.[1] கட்சித் தலைமை ஜார்க்கண்டின் உள்ளூர் காதியானி மக்களின் நலனில் சமரசம் செய்வதாகவும், குற்றம் சாட்டினார். 6 ஏப்ரல் 2022 அன்று புதிய அரசியல் கட்சியான கதியானி ஜார்கண்டி கட்சியை உருவாக்குவதாகவும் அறிவித்தார்.[2][3]

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

சிறுவயதிலிருந்தே இவர் கல்வியில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் இராஞ்சி, மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலைப் பொறியியல் (கட்டுமானவியல்) படிப்பினை முடித்தார்.[4]

புரட்சியாளர்[தொகு]

பள்ளி நாட்களில் இவர் பிராந்தியத்தின் நன்கு அறியப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பினோத் பிகாரி மகதோ மற்றும் நிர்மல் மகதோ ஆகியோரின் செல்வாக்கிற்கு உட்பட்டார். பினோத் பிகாரி மகதோ இவருக்கு தீட்சை அளித்து சுதந்திரப் போராட்டத்தை நோக்கி உந்துவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்_மகதோ&oldid=3854445" இலிருந்து மீள்விக்கப்பட்டது