அமிதாப்பச்சன் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிதாப்பச்சன் அருவி (Amitabh Bachchan Falls)(உண்மையான பெயர்: பீவ்மா அருவி) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள இயும்தாங் பள்ளத்தாக்கினை சுங்தாங்குடன் இணைக்கும் சாலையில் உள்ளது. இதன் உயரத்தினை குறிக்கும் வகையில், பாலிவுட்டில் உயரமான நட்சத்திரம் அமிதாப்பச்சன் பெயரினை நினைவூட்டும் விதமாக அமிதாப்பச்சன் அருவி எனப் பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது.[1]

இங்குச் சுற்றுலா செல்லும்போது இப்பகுதி சுற்றுலா அமைப்பாளர்கள் வாகன ஓட்டுநர்கள் இந்த அருவிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று. சிக்கிமில் உள்ள பிற நீர்வீழ்ச்சிகளைப் போலவே, கூகிள் தேடலால் காட்டப்படும் சிக்கிம் அருவி படங்களுடன் இதுவும் வருவதால் சில குழப்பம் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Been to Amitabh Bachchan waterfall in Sikkim, even Big B is shocked". Shriaya Dut (Tribune India). 31 August 2019. https://www.tribuneindia.com/news/archive/lifestyle/been-to-amitabh-bachchan-waterfall-in-sikkim-even-big-b-is-shocked-825810. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதாப்பச்சன்_அருவி&oldid=3514079" இருந்து மீள்விக்கப்பட்டது