அமிடோசல்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிடோசல்பைட்டு (Amidosulfite) என்பது =NS(O)O- என்ற வேதி வினைக்குழுவைப் பெற்றுள்ள ஒரு வேதிச் சேர்மத்தைக் குறிக்கும். மாற்றுகள் நைட்ரசனுடன் இரண்டு பிணைப்புகளாலும், ஆக்சிசனுடன் ஒரு பிணைப்பாலும் இணைய முடியும். இச்சேர்மங்கள் பொதுவாக RR'NS(O)OR" வடிவத்தில் காணப்படும். மேலும் இவற்றை நைட்ரசன் நேர்மின் சுமையையும், ஆக்சிசன் எதிர்மின் சுமையையும் ஒருங்கே பெற்றுள்ள இருமுனை அயனி சேர்மங்களாகக் கருத இயலும். பின்னர் இதனுடன் எந்த குழுவும் இணைக்கப்படுவதில்லை. இவை உள் உப்புக்கள் என்று அழைக்கப்படுகின்றன. நைட்ரசனுடன் மூன்று குழுக்கள் (RR'R"N+S(O)O−) இணைவதை இவை அனுமதிக்கின்றன [1].

அமிடோகந்தச அமிலம் H2NS(O)OH ஓர் எளிய அமிடோசல்பைட்டுக்கு உதாரணமாகும். ஓர் அமோனியம் உப்பையும் (H2NS(O)O−NH4+ ) இது பெற்றுள்ளது. கந்தக டை ஆக்சைடு அமோனியாவுடன் 1:1 அல்லது 1:2 விகிதத்தில் கலக்கும் போது உட்கிடக்கையாக இவை உற்பத்தியாகின்றன [1].

என்-(2-டைமெத்திலமோனியோ-எத்தில்)அமிடோசல்பைட்டு, என்-(2-டையெத்திலமோனியோ-எத்தில்)அமிடோசல்பைட்டு, என்-[2-(1-பிப்பெரிடினியம்-1-ஐல்)-எத்தில்]அமிடோசல்பைட்டு, N-[2-(4-மோர்போலினியம்-4-ஐல்)-எத்தில்]அமிடோசல்பைட்டு, சோடியம் என்-எத்திலமிடோசல்பைட்டு (C2H5NHS(O)ONa), எத்தில் என்-எத்திலமிடோசல்பைட்டு (C2H5NHS(O)OC2H5), டையெத்தில்-பாசுப்பானைல் என்-மெத்திலமிடோசல்பைட்டு, டைபீனைல்-பாசுபானைல் என்-மெத்திலமிடோசல்பைட்டு, என்,என்-டைமெத்திலமிடோகந்தச அமிலம்,என்,என்,டையெத்திலமிடோ கந்தச அமிலம், என்,என்-பிசு(2-ஐதராக்சியெத்தில்)டையெத்திலமிடோகந்தச அமிலம், சோடியம் என்,என்-டைமெத்திலமிடோசல்பைட்டு, சோடியம் என்,என்-டையெத்திலமிடோசல்பைட்டு, இலித்தியம் என்,என் - டையெத்திலமிடோசல்பைட்டு, இலித்தியம் என்-எக்சாபுளோரோ ஐசோபுரோப்பைலிடினியாமிடோசல்பைட்டு (நைட்ரசனுடன் இரட்டைப் பிணைப்பு), சோடியம் 1-பிப்பெரிடின்சல்பினேட்டு Na(CH2)5NHS(O)O. உள்ளிட்ட சேர்மங்கள் அறியப்பட்டுள்ள அமிடோசல்பைட்டுகளாகும்[1].

டிரைமெத்தில்சிலில் என்,என்-டையெத்திலமிடோசல்பைட்டு, டிரைமெத்தில்வெள்ளீய என்,என்-டைமெத்திலமிடோசல்பைட்டு அல்லது டைமெத்தில்தாலியம் என்,என்-டைமெத்திலமிடோசல்பைட்டு போன்ற சேர்மங்களை கரிம உலோக மாற்றுகள் உற்பத்தி செய்கின்றன[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Baumann, Norbert; Fachmann, Hans-Jürgen; Heibel, Brigitte; Jotter, Reimund; Ledüc, Birgit (2013) (in en). S Sulfur-Nitrogen Compounds: Compounds with Sulfur of Oxidation Number IV. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783662063637. https://books.google.com.au/books?id=Tkj1CAAAQBAJ&pg=298. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிடோசல்பைட்டு&oldid=2945994" இலிருந்து மீள்விக்கப்பட்டது