அமிசியின் கூரைப் பட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிசியின் கூரை பட்டகம்

அமிசியின் கூரைப் பட்டகம் (Amici roof prism) வானியல் வல்லுநர் ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி உருவாக்கினார். தன் மீது படும் கதிரை 90° கோணத்திற்கு திருப்புவதுடன், தலைகீழான பிம்பத்தை உருவாக்கும் எதிரொளிப்பு வகை பட்டகமாகும். இவை பொதுவாக தொலைநோக்கியின் கண்ணருகு வில்லையுடன் இணைக்கப்பட்டு பிம்பத்தை நேராக்கப் பயன்படுகிறது. அமிசி பட்டகம் எனவும் செங்கோண கூரை பட்டகம் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இது நிறப்பிரிகை செய்யாத அமிசி பட்டகமாகும். ஆனால் நிறப்பிரிகை செய்யும் அமிசி பட்டகமும் உள்ளது.

இப்பட்டகம், வழக்கமான செங்கோண பட்டக அமைப்பில் கூடுதலாகக் கூரை அமைப்புக் கொண்டுள்ளது. பட்டகத்தின் நீளமான பகுதியின் மீது கூரை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு அக எதிரொளிப்பு மூலம் கூரை அமைப்பு பிம்பத்தை தலைகீழாக திருப்புகிறது.

சில சமயங்களில் கூரை அமைப்பு  கண்ணாடி போல் செயல்பட பூச்சு பூசப்பட்டுள்ளது.  இதனால் முழு அக எதிரொளிப்பு மட்டுமல்லாது,  படும் கதிர் 90° மற்றும் பிற கோணத்திற்கும் திருப்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]