அமாக்சிசிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமாக்சிசிலின் (Amoxicillin) ஒரு நுண்ணுயிர்க்கொல்லி ஆகும்.[1] பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வாய் வழியாகவும் சில நேரங்களில் ஊசி மூலமாகவும் இம்மருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

1958 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டில் இம்மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.[3][4] உலகச் சுகாதார நிறுவனம் (WHO) இதனை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது.[5] குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளில் இம் மருந்து முக்கியமானது.[6]

மருத்துவப் பயன்[தொகு]

காதின் நடுப்பகுதி, தொண்டை, தோல், சிறுநீர்க் குழாய் பகுதி ஆகியவற்றில் தொற்று, நிமோனியா, சால்மோனல்லா தொற்று, கிளமிடியா தொற்று, லைம் நோய் போன்றவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

பக்க விளைவுகள்[தொகு]

குமட்டல், வாந்தி, தடுப்பு, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, தலைவலி, குழப்பம், பயம், ஒலி மற்றும் ஒளிக்கு கூசுதல் போன்றவை பக்க விளைவாக ஏற்படலாம்.[1][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Amoxicillin". The American Society of Health-System Pharmacists. மூல முகவரியிலிருந்து 5 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 August 2015.
  2. "Amoxicillin Sodium for Injection" (10 February 2016). மூல முகவரியிலிருந்து 27 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 October 2016.
  3. Fischer, Janos; Ganellin, C. Robin (2006) (in en). Analogue-based Drug Discovery. John Wiley & Sons. பக். 490. ISBN 9783527607495. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908135935/https://books.google.com/books?id=FjKfqkaKkAAC&pg=PA490. 
  4. Roy, Jiben (2012). An introduction to pharmaceutical sciences production, chemistry, techniques and technology. Cambridge: Woodhead Pub.. பக். 239. ISBN 9781908818041. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908135935/https://books.google.com/books?id=0IdmAgAAQBAJ&pg=PA239. 
  5. "WHO Model List of Essential Medicines (19th List)". World Health Organization (April 2015). மூல முகவரியிலிருந்து 13 December 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 December 2016.
  6. Kelly, Deirdre (2008). Diseases of the liver and biliary system in children (3 ). Chichester, UK: Wiley-Blackwell. பக். 217. ISBN 9781444300543. Archived from the original on 2017-09-08. https://web.archive.org/web/20170908135935/https://books.google.com/books?id=z7nO3OrNXckC&pg=PA217. 
  7. Gillies, M; Ranakusuma, A; Hoffmann, T; Thorning, S; McGuire, T; Glasziou, P; Del Mar, C (17 November 2014). "Common harms from amoxicillin: a systematic review and meta-analysis of randomized placebo-controlled trials for any indication". CMAJ : Canadian Medical Association Journal 187 (1): E21–31. doi:10.1503/cmaj.140848. பப்மெட் 25404399. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாக்சிசிலின்&oldid=2632980" இருந்து மீள்விக்கப்பட்டது