அமர் திறப்பு
நகர்வுகள் | 1.Nh3 |
---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | ஏ00 |
தோற்றம் | சார்லசு அமர், பாரிசு, 1930கள் |
பெயரிடப்பட்டது | சார்லசு அமர் |
மூலம் | ஒழுங்கற்ற சதுரங்கத் திறப்பு |
ஏனைய சொற்கள் | பாரிசு திறப்பு போதை குதிரை திறப்பு அமோனியா திறப்பு |
Chessgames.com opening explorer |
அமர் திறப்பு (Amar Opening) என்பது பின் வரும் சதுரங்கத் திறப்பு நகர்வுகளை கொண்டு தொடங்குகிறது. இத்திறப்பை பாரிசு திறப்பு, போதை குதிரை திறப்பு அல்லது அமோனியா திறப்பு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அமோனியாவின் வேதியியல் வாய்ப்பாடும் (NH3) இத்திறப்பின் முதல் நகர்வும் (Nh3) ஒன்றாக இருப்பதால் அமர் திறப்பு சில சமயங்களில் அமோனியா திறப்பு என்றழைக்கப்படுகிறது. 1930 களில் பாரசீகத்தைச் சேர்ந்த சார்லசு அமர் இத்திறப்பை முதன்முதலில் விளையாடினார். போலந்து மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் சவியெல்லி டார்ட்டகோவர் இவ்வகைத்திறப்புக்கு அமர் திறப்பு எனப் பெயரிட்டார். இவ்விரண்டு பெயர்களையும் இவர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிட்த்தக்கது. இலண்டனைச் சேர்ந்த சதுரங்க சதுரங்க வீர்ர் திம் ஆர்டிங் என்பவர் இந்நகர்வை அமர் என்ற ஆங்கில சொல்லின் விரிவாக்கம் கட்டுக்கடங்காத பைத்தியம் மற்றும் கேலிக்கிடமான திறப்பு (Absolutely mad and ridiculous) என்ற பொருள் கொண்டது என நகைச்சுவையாகத் தெரிவிப்பதுண்டு.
வழக்கத்திற்கு மாறான அரிய திறப்பு முறை என்பதால் Nh3 திறப்பை சதுரங்க கலைக்களஞ்சியம் ஏ0 என்ற குறியீட்டால் குறிக்கிறது.
விவாதங்கள்[தொகு]
தர்கின் திறப்பைப் போலவே இத்திறப்பிலும் வெள்ளை தன்னுடைய குதிரையை எந்தவொரு பொருத்தமான காரணமுமில்லாமல் விலாப்புறத்தில் வெளியே கொண்டுவருகிறது. இவ்வாறு வெளியே கொண்டுவருவது அலங்கோலமானது. விலாப்புறத்து குதிரை வலிமையற்றது என்று சீக்பெர்ட் தாரசு கூறுகிறார். எனினும் ராசா பக்கத்து குதிரையை வெளியே கொண்டுவருவது ராசா பக்கத்து கோட்டை காட்டுவதற்கான தயாரிப்பு என கருதி இதையும் ஒரு பொதுவான நகர்வாக கருதலாம் என்று கருதுவோரும் உண்டு. குதிரையை 1.Na3 நகர்வு செய்வதைக்காட்டிலும் 1.Nh3 நகர்வு செய்வது பொதுவானது என்பாரும் உண்டு. . வெள்ளையின் இந்த முதல் நகர்வுக்கு எதிராக கருப்பு பொதுவாக 1...d5 என விளையாடுவது வழக்கம். இரண்டாவது நகர்வின் போது கருப்பு 2...Bxh3 என விளையாடி வெள்ளையின் சிப்பாய் கட்டமைப்பை சீர்குலைக்கின்ற அச்சமூட்டும் நகர்வினை விளையாட திட்டமிடுகிறது என பொருளாகும். இதற்கு பதிலாக வெள்ளை 2.g3 என விளையாடும். எனவே கருப்பு மீண்டும் மையத்தை குறிவைத்து 2...e5. என விளையாடும்.
பெயர் சூட்டப்பட்ட மாறுபாடுகள்[தொகு]
அமர் திறப்பு சதுரங்க திறப்பில் பல பெயர்சூட்டப்பட்ட மாறுபாடுகள் விளையாடப்படுகின்றன. இவற்றில் மிகவும் பிரபலான திறப்பு பாரிசு பலியாட்டம் எனப்படும் சதுரங்கத் திறப்பாகும். 1.Nh3 d5 2.g3 e5 3.f4?! Bxh3 4.Bxh3 exf4. பாரிசு பலியாட்டத் திறப்பில் கருப்பு மையப்பகுதியில் நிலையாக இடம்பிடிப்பதை வெள்ளை அனுமதிக்கிறது. கருப்புக்கு சில அதிக புள்ளிகள் கிடைப்பதையும் வெள்ளை அனுமதிக்கிறது. கொடுக்கப்பட்ட பலியும் வீணாகப் போகுமோ என்ற சந்தேகத்தையே அளிக்கிறது. பாரிசு பலியாட்ட்த்தில் பெயரிடப்பட்ட ஒரேயொரு மாறுபாடு கெண்ட் பலியாட்டம் மட்டுமே.: 5.0-0 fxg3 6.hxg3. இவ்வகையான மாறுபாட்டை முதலில் தார்டாகோவர், 1933 ஆம் ஆண்டு ஆண்டோர் லைலியெந்தாலை எதிர்த்து பாரிசில் விளையாடும்போது பயன்படுத்தினார். இதைதவிர மற்றொரு பெயரிடப்பட்ட மாறுபாட்டு நகர்வும் 1...e5 நகர்வில் விளையாடப்படுகிறது. கிரேசி காட் எனப்படும் இம்மாறுபாட்டில் : 1.Nh3 e5 2.f3 d5 3.Nf2 என்ற போக்கில் நகர்வுகள் இருக்கும்.
மேற்கோள்கள் =[தொகு]
- Angus Dunnington (2000). Winning Unorthodox Openings. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85744-285-4.
- David Vincent Hooper; Kenneth Whyld (1996). The Oxford Companion To Chess (second ). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-280049-3.
- Eric Schiller (2002). Unorthodox Chess Openings (Second ). Cardoza. பக். 45–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58042-072-9.
- Edward G. Winter (1996). Chess Explorations. London: Cadogan Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85744-171-0.
புற இணைப்புகள்[தொகு]
![]() |
The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: Amar Opening |