அப்துல் கரீம் (வரலாற்றாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் கரீம்
சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
பதவியில்
28 நவம்பர் 1975 – 18 ஏப்ரல் 1981
முன்னையவர்அபுல் பசல் (எழுத்தாளர்)
பின்னவர்அசீசு கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1928
இறப்பு(2007-07-24)24 சூலை 2007 (வயது 79)
சிட்டகாங், வங்காளதேசம்
வேலைவரலாற்றாசிரியர், பல்கலைக்கழகக் கல்வியாளர்

அப்துல் கரீம் (Abdul Karim) (சுமார் 1928 - 24 ஜூலை 2007)[1] வங்காளதேசத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். இவர் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் 5 வது துணைவேந்தராக பணியாற்றினார். [2] வங்காளதேச அரசால் 1995 இல் இவருக்கு எகுஷே பதக் விருது வழங்கப்பட்டது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கரீம், ஜூன் 1, 1928 இல் பிறந்தார். 1944 இல் உயர் மதராசாத் தேர்வையும் 1946 இல் இடைநிலைக் கலைத் தேர்வையும் முடித்தார். இவர் 1949 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். [4]

தொழில்[தொகு]

அப்துல் கரீம் 1951 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். இவருக்கு வரலாற்றாசிரியர் அகமத் அசன் தானி வழிகாட்டியாக இருந்தார். பின்னர் இவர் தனது முனைவர் பட்ட ஆராய்சிக்காக இங்கிலாந்து சென்று 1958 இல் முடித்தார். வங்காளத்தில் முஸ்லிம்களின் சமூக வரலாறு என்பது இவரது ஆராய்ச்சியின் தலைப்பாகும். இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழக்கு மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் இரண்டாவது முனைவர் பட்டத்தை முடித்தார். 1966 இல், இவர் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைவராக சேர்ந்தார். 1986 இல் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், இவர் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தின் வங்காளதேச ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் மூத்த சக ஊழியராக சேர்ந்தார். 2001 இல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். [5] [4]

இறப்பு[தொகு]

கரீம் 24 ஜூலை 2007 அன்று வங்காளதேசத்தின் சிட்டகாங்கில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historian Abdul Karim dies at 79". bdnews24.com. 24 July 2007. http://bdnews24.com/bangladesh/2007/07/24/historian-abdul-karim-dies-at-79. 
  2. "Vice-Chancellors".
  3. . http://www.moca.gov.bd/site/page/c706da0c-29ee-4f0f-95d9-fa6705e19001/. 
  4. 4.0 4.1 "Karim, Abdul2".
  5. "Historian Abdul Karim dies at 79". bdnews24.com. 24 July 2007. http://bdnews24.com/bangladesh/2007/07/24/historian-abdul-karim-dies-at-79. 
  6. "Karim, Abdul2". பார்க்கப்பட்ட நாள் 19 September 2017."Karim, Abdul2". Banglapedia. Retrieved 19 September 2017.