உள்ளடக்கத்துக்குச் செல்

அபுல் மொமென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுல் மொமென்
பிறப்புதிசம்பர் 18, 1948 (1948-12-18) (அகவை 75)
சத்கானியா உபாசிலா, சிட்டகொங், வங்காளதேசம்
கல்விமுதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிபத்திரிக்கையாளர்
வாழ்க்கைத்
துணை
சீலா
விருதுகள்எகுசே பதக்
பங்களா அகாதமி இலக்கிய விருது

அபுல் மொமென் (Abul Momen) (பிறப்பு: டிசம்பர் 18, 1948)[1] வங்காளதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் 1998 முதல் புரோதோம் அலோ என்ற தினசரி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். தற்போது தைனிக் சுப்ரபாத் என்ற இதழின் ஆலோசனை ஆசிரியராக உள்ளார். [2][3]வங்காளதேச அரசால் 2017 இல் இவருக்கு எகுசே பதக் விருது வழங்கப்பட்டது.[4]

பின்னணி மற்றும் தொழில்

[தொகு]

மொமன், டிசம்பர் 18, 1948 இல் சிட்டகாங் மாவட்டத்தில் கியோச்சியா ஒன்றியத்திலுள்ள சத்கானியா உபாசிலாவில் பிறந்தார்.[5] எழுத்தாளர் அபுல் பசல் இவரது தந்தையாவார்.[3] டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த பின்னர்,[1] இவர் சிட்டகாங் கலைக் கல்லூரி, தி டெய்லி ஸ்டார் மற்றும் தி டெய்லி போரர் ககோஜ்[1] ஆகியவற்றில் பணியாற்றினார். [1] இவர் புனைகதை அல்லாத பிரிவில் 2016 இல் பங்களா அகாடமி இலக்கிய விருதை வென்றார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மொமன், சீலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Rafi Hossain and Zahidul Naim Zakaria (March 1, 2008). "Fulki: For Better Learning". The Daily Star இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 17, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210917122316/http://archive.thedailystar.net/starinsight/2008/03/01/cover.htm. 
  2. "Suprabhat Paribar" (in bn). esuprobhat.com. https://esuprobhat.com/view.php?img=content/2017/2017-02-14/zoom_view/2017_02_14_1m. 
  3. 3.0 3.1 "BFUJ greets Abul Momen for attaining Bangla Academy Award". Daily New Nation. February 1, 2016 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 27, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927040844/https://thedailynewnation.com/news/82252/bfuj-greets-abul-momen-for-attaining-bangla-academy-award.html. 
  4. "17 named for Ekushey Padak 2017". The Daily Star. February 12, 2017. http://www.thedailystar.net/country/17-named-ekushey-padak-2017-1360108. 
  5. আবুল মোমেন. prothoma.com (in Bengali). Archived from the original on November 27, 2020. பார்க்கப்பட்ட நாள் October 2, 2020.
  6. "11 honoured with Bangla Academy awards". The Daily Star. January 28, 2016. http://www.thedailystar.net/country/11-honoured-bangla-academy-awards-208660. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_மொமென்&oldid=4108725" இலிருந்து மீள்விக்கப்பட்டது