அபினா அகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபினா அகர் (Abhina Aher) ஓர் இந்திய திருநங்கை ஆர்வலர் ஆவார். இவர் தெ ஹம்ஸபர் ட்ரஸ்ட் (மும்பை),ஃபேமிலி ஹெல்த் இன்டர்நேஷனல், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் கம்யூனிகேஷன் புரோகிராம் மற்றும் இந்திய எயிட்சு ஒப்பந்தம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் . [1] இவர் ஒரு கலைஞர் மற்றும் டான்சிங் குயின்ஸ் எனும் திருநங்கைகளின் நடனக் குழுவின் நிறுவனர் ஆவார் . [2] [3] [4] [5] [6] அபினா ஐ - டெக் இந்தியா என்பதில் தொழில்நுட்ப நிபுணராக உள்ளார். [7] எச்.ஐ.வி/எய்ட்சு துறையில் இவருக்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது. [8] ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், நரம்பு வழி மருந்துகள் பயன்படுத்துபவர்கள் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் உலக நிதியுதவி திட்டமான 'பெச்சான்' என்பதன் திட்ட மேலாளராகவும் இருந்தார். [9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அபினா மும்பையில் ஒரு நடுத்தர வர்க்க மஹாராட்டிரிய குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அபிஜீத் அகர்.[10] இவரது தாயார் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞர் மற்றும் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் அடிக்கடி அதிகாரப்பூர்வ விழாக்களில் கலந்துகொண்டுள்ளார். அபினா தனது தாயின் நடன அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்து தனியாக இருந்த சமயத்தில் அதனைப் பின்பற்ற முயன்றார். [11] இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். இவரது தாயால் தனியாக வளர்க்கப்பட்டார். பின்னர், அவர் மறுமணம் செய்து கொண்டார். [10]

சுயசரிதை[தொகு]

அகர் பெருமைமிகு படைத்தகைகளில் பங்கேற்று தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் திருநங்கைகள் சமூகத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இவர் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். இவர் திருநங்கை சமத்துவத்திற்கான உலகளாவிய நடவடிக்கைக்கான எச்.ஐ.வி ஆலோசகராக உள்ளார். [12] இவர் சர்வதேச டிரான்ஸ் ஃபண்ட் யுனைடெட் ஸ்டேட்ஸில் ஒரு இயக்கக் குழு உறுப்பினர் ஆவார். [13] இவர் பாலியல் மற்றும் பாலின திட்டங்களின் ஆலோசகர் மற்றும் இந்தியா எச்ஐவி/எய்ட்சு கூட்டணியில் பெச்சான் திட்டத்தின் தேசிய திட்ட மேலாளராகவும் உள்ளார். [14] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் கம்யூனிகேஷனில் யுஎஸ்ஐஐடி மானியத்தில் எம்ஏஆர்பி -யில் சார்ஜ் கம்யூனிகேஷன் திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார்.

அகர் டான்சிங் குயின்ஸ் என்ற திருநங்கையின் நடனக் குழுவின் நிறுவனர் ஆவார். இந்த குழு திருநங்களைகள் எதிர்கொள்ளும் தடைகளை நடனம் மூலமாக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த குழு 2009 இல் நிறுவப்பட்டது மற்றும் பல்வேறு நகரங்களில் நிகழ்த்தப்பட்டது. [15] [16] [17] 2016 ஆம் ஆண்டில், திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இவர் ட்வீட் எனும் அறக்கட்டளையை நிறுவினார். [11]

விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் தனது திருநங்கை நிலை குறித்து அறிய ஆர்வமாக இருந்தபோது அபினா சிக்கலை அனுபவித்தார். சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் (ஆண் மற்றும் பெண் இருவரும்) அவரை சோதிக்க மறுக்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தனது நிலையில் உறுதியாக இருந்து திருநங்கை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார். [18] [19]

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்[தொகு]

2014: இந்தியாவில் திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தனது பணிக்காக REX ஆய்வுதவித் தொகை விருதுபெற்றவர் .[சான்று தேவை]

2017: மனித உரிமைகள் பிரச்சாரத்தின் உலக புதிதுபுனையுநர் விருது [20]

சான்றுகள்[தொகு]

 1. "Discrimination no longer my favourite word… finally, we have a foot in the door". http://indianexpress.com/article/india/india-others/discrimination-no-longer-my-favourite-word-finally-we-have-a-foot-in-the-door/. 
 2. "Transgender activist, Abhina Aher speaks out : MagnaMags". மூல முகவரியிலிருந்து 11 January 2014 அன்று பரணிடப்பட்டது.
 3. "Being Accepted by my Mum, Being Transgender: Isis King and Abhina Aher, The Conversation - BBC World Service".
 4. "Abhina Aher". Archived from the original on 2018-04-02. https://web.archive.org/web/20180402132504/http://www.jgu.edu.in/public/chlet/content/abhina-aher. 
 5. "A Journey of Pain And Beauty: On Becoming Transgender in India". https://www.npr.org/sections/parallels/2014/04/18/304548675/a-journey-of-pain-and-beauty-on-becoming-transgender-in-india. 
 6. "Regional Steering Committee" (en-US). மூல முகவரியிலிருந்து 12 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 7. "TEDxUSICT | TED.com" (en).
 8. "Abhina Aher - India HIV/AIDS Alliance".
 9. "Abhina Aher - India HIV/AIDS Alliance".
 10. 10.0 10.1 Society, Team (2013-09-16). "Transgender activist, Abhina Aher speaks out".[தொடர்பிழந்த இணைப்பு]
 11. 11.0 11.1 "Proud Hijra - Abhina Aher" (en-US) (2018-03-30).
 12. "Welcome Abhina!" (en) (2016-10-06). மூல முகவரியிலிருந்து 14 March 2017 அன்று பரணிடப்பட்டது.
 13. "Show Me the Money! New Funding and Leadership Opportunities for Trans Activists Worldwide" (en) (2016-11-01). மூல முகவரியிலிருந்து 14 March 2017 அன்று பரணிடப்பட்டது.
 14. "Incredible India, Invest in Communities!" (en-GB).
 15. "This Dance Troupe Highlights the Problems Faced By Transgenders in India Everyday". http://www.cosmopolitan.in/life/news/a2298/this-dancing-troupe-highlights-the-problems-faced-by-transgenders-in-india/. 
 16. "This Transgender Troupe Uses Dance As A Way To Highlight The Problems They Face".
 17. "Meet India's First Transgender Dance Group That Deserves All Your Respect". http://www.vagabomb.com/Meet-Indias-First-Transgender-Dance-Group-That-Deserves-All-Your-Respect/. 
 18. Kumar, Ashwani. "Transgender's 'uncomfortable' transit at Abu Dhabi airport".
 19. "'Are you a man or woman': Transgender humiliated at Abu Dhabi airport". http://www.deccanchronicle.com/world/middle-east/041016/was-asked-if-i-was-a-man-or-woman-transgender-humiliated-at-abu-dhabi-airport.html. 
 20. Campaign, Human Rights. "Four Highlights from Day One of HRC's Global Summit | Human Rights Campaign" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினா_அகர்&oldid=3373288" இருந்து மீள்விக்கப்பட்டது