அபிசேக் வெர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிசேக் வெர்மா
Abhishek Verma
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு1 ஆகத்து 1989 (1989-08-01) (அகவை 34)
அரியானா, பானிப்பட்டு
உயரம்5’10
எடை68
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)காற்றுத் துப்பாக்கி
கழகம்யதுவன்சி துப்பாக்கி சுடும் விளையாட்டு அகாதமி
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசை10 மீ காற்றுத் துப்பாக்கியில் முதலிடம்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் குறி பார்த்துச் சுடுதல்
நாடு  இந்தியா
ஆண்கள் குறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 1
உலக வெற்றியாளர் போட்டி - 1 -
உலகக் கோப்பை 3 1 2
ஆசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் 1 - 1
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 யாகர்தா, பாலெம்பேங்கு ஆண்கள் 10 மீ காற்றுத் துப்பாக்கி
உலக வெற்றியாளர் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 சாங்வோன் 10 மீ காற்றுத் துப்பாக்கி
உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 பீகிங் 10 மீ காற்றுத் துப்பாக்கி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 ரியோ டி செனிரோ 10 மீ காற்றுத் துப்பாக்கி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2021 புது தில்லி 10 மீ காற்றுத் துப்பாக்கி ஆண்கள் அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் ரியோ டி செனிரோ 10 மீ காற்றுத் துப்பாக்கி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 புது தில்லி 10 மீ காற்றுத் துப்பாக்கி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 புது தில்லி 10 மீ காற்றுத் துப்பாக்கி கலப்பு அணி
ஆசிய துப்பாக்கி சுடும் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 தோகா 10 மீ காற்றுத் துப்பாக்கி, கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 தோகா 10 மீ காற்றுத் துப்பாக்கி ஆண்கள் அணி

அபிசேக் வெர்மா (Abhishek Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரராவார். 1989 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகிங்கில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் கூட்டிணைவுப் போட்டியில் 10 மீ காற்றுத் துப்பாக்கி பிரிவில் அபிசேக் தங்கப் பதக்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு யாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதே 10 மீ காற்றுத் துப்பாக்கிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். [1] 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவும் அபிசேக் தகுதி பெற்றார். [2] 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி வகை குறிபார்த்து சுடுதல் போட்டியின் தரநிலையில் அபிசேக் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். [3]

உலகக் கோப்பையில் இரட்டை தங்கப் பதக்கம் வென்ற அபிசேக்கு கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் படித்திருக்கிறார். சைபர் குற்றம் தொடர்பான வழக்குகளைச் சமாளிக்க விரும்புகிறார். [4] ரியோ டி செனிரோவில் நடைபெற்ற உலக்க் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் அபிசேக் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asian Games 2018 Live Updates Day 3: Gold For 16-Year-Old Saurabh Chaudhary, Abhishek Verma Clinches Bronze". [sports.ndtv.com]. 21 August 2018. https://sports.ndtv.com/asian-games-2018/2018-asian-games-live-updates-day-3-1903563. பார்த்த நாள்: 21 August 2018. 
  2. "Maintaining form, focus till next year's Olympics a challenge, but I am prepared: Abhishek Verma". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
  3. "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_வெர்மா&oldid=3205272" இலிருந்து மீள்விக்கப்பட்டது