அபாயச் சங்கிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிட்டனில் தொடர்வண்டி ஒட்டுநரின் வேகத்தடை கருவி

அபாயச் சங்கிலி ( emergency brake (train) என்பது ஆபத்துக்காலங்களில் பயணிகள் தொடருந்தை நிறுத்த உதவும் கருவியாகும்.

வேகத் தடை செயல்படும் விதம்[தொகு]

தொடருந்தை உடனடியாக நிறுத்தும் வேகத்தடைக்கு பெயர் நியூமாட்டிக் பிரேக் என்பதாகும். தொடருந்தில் கம்ரெசர் என்னும் காற்று சேகரிப்பானை வைத்திருப்பார்கள். இதில் காற்றை அழுத்தத்துடன் ஒரு முதன்மை உருளையில் சேகரித்து வைத்திருப்பார்கள். இதில் இருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ஒரு குழாய் ஒவ்வொரு பெட்டிக்கும் காற்றழுத்தம் செல்லும். இக்குழாய் ஒவ்வொரு பெட்டியிலும் இணைக்கப்பட்டிருக்கும். இதேபோல ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாகவும் காற்றழுத்த உருளைகள் இருக்கும். இந்த உருளைகளிலும் காற்று அழுத்தத்துடன் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதிலும் முதன்மை உருளையிலும் காற்றழுத்தம் ஒரே அளவாக இருக்கும். இவை இரண்டு அழுத்தங்களும் ஒரே அளவாக இருக்கும்வரை வேகத்தடைக் கட்டைகள் சக்கரங்களின் மேல் படாமல் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுநர் வண்டியை உடனே நிறுத்த விரும்பினால் முதன்மை உருளையில் இருந்து வரும் காற்றை நிறுத்திவிடுவார். இதனால் ஒவ்வொரு பெட்டிகளிலும் இருக்கும் தனிப்பட்ட உருளைகளில் இருக்கும் காற்றழுத்தம் அதிகமாவதால் லிவர்கள் இயங்கி வேகத்தடை கட்டைகள் சக்கரங்களை அழுத்தி வண்டியை நிறுத்துகின்றன.

பெட்டிகளில்[தொகு]

இந்தியாவில் சிவப்பு பிடியுடன் அபாயச் சங்கிலி

தொடர்வண்டி பெட்டிகளில் சிவப்பு நிறத்தில் உள்ள சங்கிலியைப் பிடித்து இழுக்கும்போது ஒரு வால்வு திறந்து ஒட்டுநர் செய்ததைப்போல ஒருபக்கம் காற்றழுத்தம் நின்றுபோய்விட வண்டிகளில் உள்ள உருளைகளின் காற்றழுத்தத்தால் வண்டிச் சக்கரங்களை வேகத்தடைக் கட்டைகள் அழுத்தி வண்டி நிற்கும்.

தண்டம்[தொகு]

இந்தியாவில் சட்டவிரோதமாக சிலர் வண்டிகளை அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்துகின்றனர்.[1]இதனால் தேவையின்றி ஒருவர் வண்டியை நிறுத்தினால் இந்திய தொடர்வண்டி நிறுவனத்தால் ரூ ஆயிரம் தண்டம் அல்லது ஒராண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "Jargon and Technical Terms, etc.". Indian Railway Fan Club. பார்த்த நாள் 2007-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாயச்_சங்கிலி&oldid=2003423" இருந்து மீள்விக்கப்பட்டது