அபர்ணா கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபர்ணா கோபிநாத்
அபர்ணா கோபிநாத்
பிறப்புசென்னை, தமிழ்நாடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013 முதல் தற்போது வரை

அபர்ணா கோபிநாத் (Aparna Gopinath) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் நாடக கலைஞர் ஆவார். மலையாள படமான ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்ஃபுயூஸிடு தேசி என்றப் படத்தில் அவர் அறிமுகமானார். அதில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணையாக நடித்திருந்தார்.

இளமை வாழ்க்கை[தொகு]

சென்னைக்கு குடியேறிய மலையாளி குடும்பத்தில் அபர்ணா பிறந்தார்.[1] அவரது திரை அறிமுகத்திற்கு முன்னர் அவர் ஒரு நாடக கலைஞரும் சமகால நடனக் கலைஞருமாவார். சென்னையில் ஒரு புதுமையான இசை நாடக இயக்கமான, கூத்து-பி-பட்டறையில் தொடர்புடையவர், மேலும் புகழ்பெற்ற நாடகங்களான சிக்ஸ் கேரக்டர்ஸ் இன் சர்ச் ஆப் ஆன் ஆத்தர், வாய்செக், மூன்ஷைன், ஸ்கைடோபி, முகம்மது பஷீரின் ஏழு சிறுகதைகளின் அடிப்படையில் சங்கதி அறிஞ்சோ போன்ற நாடகங்களிலும் மற்றும் வில்லியம் சேக்சுபியரின் பல நாடங்களிலும் நடித்துள்ளார்.[2][2][3][4][5][6]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

அபர்ணா, மார்ட்டின் பிரக்கத்தின் "ஏ. பி. சி. டி.: அமெரிக்கன் பார்ன் கன்ஃபுயூஸிடு தேசி" படத்தின் மூலமாக அறிமுகமானார். இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. அதில், கல்லூரி செல்லும் மதுமிதா கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். இவர் கதாநாயகியாக ஆஸிப் அலியுடன் நடித்த இரண்டாவது படம் "பைசைக்கிள் தீவ்ஸ்" ஆகும்.

மேலும், 1995இல் மம்மாஸ் கே. சந்திரனின், "மன்னார் மாத்தாய் ஸ்பீக்கிங் 2" நகைச்சுவை படத்திலும், ஜெயசூர்யா (நடிகர்) நடித்த போபன் சாமுவேலின் "ஹேப்பி ஜர்னி" (2014) படத்திலும் நடித்துள்ளார்.மம்மூட்டி நடித்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் வேணுவின் படமான "முன்னாரியிப்பு" படத்தில் இளம் பத்திரிகை நிருபராக நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் வாயிலாக இவர் கலவையான விமர்சனங்களைப் பெற்றார். மோகன்லால்-பிரியதர்சன் படமான "அம்மு டு அம்மு"வில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. 2016இல், "கிரந்தி" திரைப்படத்தில் நடித்து முடித்தார். ஆனால் இப்படம் திரையிடப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, P. K. Ajith (10 April 2014). "Roll of roles". The Hindu. http://www.thehindu.com/features/cinema/roll-of-roles/article5895371.ece. 
  2. 2.0 2.1 "I'm open to more challenging roles: Aparna Gopinath". The Times of India. 31 October 2012. 3 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 September 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Aparna Gopinath". Facebook. 21 September 2013 அன்று பார்க்கப்பட்டது.[non-primary source needed]
  4. "Aparna gopinath – Movies, Photos, Filmography, biography, Wallpapers, Videos, Fan Club". entertainment.oneindia.in. 21 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Aparna Gopinath". Rotten Tomatoes. 1 January 1970. 21 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Aparna Gopinath Archives | Moviexpress.comMoviexpress.com". Moviexpress.com. 21 September 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_கோபிநாத்&oldid=3331581" இருந்து மீள்விக்கப்பட்டது