உள்ளடக்கத்துக்குச் செல்

அபர்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபர்டைட்டு (Aubertite) என்பது CuAl(SO4)2Cl·14H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீலநிறத்துடன் சமச்சீரற்ற முச்சரிவச்சு படிகங்களாக அபர்டைட்டு தோன்றுகிறது. கண்ணாடி பளபளப்புடன் ஒளிபுகும் தன்மையைக் கொண்டுள்ளது. இதற்கு கதிரியக்கப்பண்பு கிடையாது. மோசின் கடினத்தன்மை அளவு கோலில் 2-3 கடினத்தன்மை மதிப்பை இது வெளிப்படுத்துகிறது. 1961 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய புவி இயற்பியல் கழகத்தின் உதவி இயக்குநர் இயே. அபர்ட்டால் (பிறப்பு 1929) அபர்டைட்டு மாதிரி சேகரிக்கப்பட்டது. சிலி நாட்டின் அண்டோபாகசுட்டா மண்டலத்தின் எல் லோவா மாகாணம், சுகிகாமாட்டா மாவட்டத்திலுள்ள கலமா நகரத்தில் அபர்டைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இங்குள்ள டோக்கி கியு படிவுகளின் குவெட்டானா சுரங்கத்தில் அபர்டைட்டு கனிமம் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்டைட்டு&oldid=3747638" இலிருந்து மீள்விக்கப்பட்டது