அன்புப்போர்
Appearance
காதலர்களிடையே ஊடல் காலத்தில் தோன்றும் சொற்போரை அன்புப் போர் எனக் குறிப்பிடுகிறோம்.
சங்கப்பாடல் ஒன்றில் [1]
- குறும்பூழ்ப்போர்,
- ஈகைப்போர்,
- பார்வைப்போர்,
- ஒட்டியப்போர்
என்னும் தொடர்கள் வருகின்றன.
கணவன் பரத்தையிடமிருந்து மனைவியிடம் வருகிறான்.
ஊடல் நிகழ்கிறது.
நில் ஆங்கு, நில் ஆங்கு, இவர்தரல் (வராதே) அவள் வீடு என நினைத்தாயா – மனைவி.
குறும்பூழ்ப் போர் கண்டுவந்தேன். வேறு யாதும் அறியேன் – கணவன்.
நீ அவளுக்கு உன்னைத் தந்து ஈகைப்போர் நடத்தியதை அறிவேன் – மனைவி.
நீயும் அவளும் ஆண்யானையும் பெண்யானையும் விளையாடும் பார்வைப்போர் நடத்தியது எனக்குத் தெரியும் – மேலும் மனைவி.
அவள் கன்னத்தில் ஒட்டியப்போர் விளையாடிவிட்டு உன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு வந்திருப்பதும் தெரிகிறது – தொடர்ந்து மனைவி.
இவற்றைக் காதலர் விளையாட்டு எனலாம்.
இவற்றையும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கலித்தொகை 95